அஞ்சல்துறையில் காலியாக உள்ள 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க,https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்..
Step : 1 - Registration என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
Step : 2 - அதன் தொடர்ச்சியாக விவரங்களை சேகரிக்கும் பக்கம் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய கட்டாய விவரங்கள் உள்ளிட வேண்டும். முதலில் உங்களுக்கு என்று தனித்துவமான போன் நம்பர் வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஒரு தனித்துவ இமெயில் வேண்டும். பின்னர் விண்ணப்பதாரின் பெயர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போலவே இருக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து, அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவை இடம்பெற வேண்டும். போன் நம்பர் மற்றும் இமெயிலை சரிபார்க்க validate என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து தரவுகளை உறுதி செய்ய வேண்டும். கடைசியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அதில் உள்ளது போலவே உள்ளிட்டு Submit செய்யவும்.
Step : 3 - அடுத்த கட்டமாக, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை உள்ளிடுவதற்கான பக்கம் தரையில் தோன்றும். அதில் ஆதார் எண், மாற்றி திறனாளியாக இருந்தால் அதற்கான குறிப்பு, 10 ஆம் வகுப்பில் படித்த மொழி, ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC) உள்ளதா போன்ற கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்த பதில்கள் அளித்து, புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தில் அளவு 50 KB கீழ் இருக்க வேண்டும், கையொப்பத்தின் அளவு 20 KB கீழ் இருக்க வேண்டும்.
Step : 4 - அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் திரையில் தோற்றும். உங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு கீழ் உள்ள Box யை கிளிக் செய்து Submit கொடுக்கவும்.
Step : 5 - ஆன்லைன் விண்ணப்படிவம் திரையில் தோன்றும். அதில் உங்களின் பெயர், அப்பா பெயர், பாலினம், பதிவு எண், பிறந்த நாள் மற்றும் சாதி ஏற்கனவே இடம்பெற்று இருக்கும். அதன் கீழ் உங்களில் வீட்டு முகவரி தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். வீட்டு முகவரியைப் பொறுத்தவரைக் கதவு எண், தெரு பெயர், பகுதி, மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். நிரந்தர முகவரிக்கும் அதையே கொண்டு பூர்த்தி செய்யலாம். தொடர்ந்து, அதன் கீழ் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிடவும். அதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதற்கான கட்டங்கள் திறக்கும். அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைச் சரியாகப் பதிவிடவும். மொழி தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் save and continue என்ற இடத்தை கிளிக் செய்யவும்.
Step : 6 - எந்த பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்று தேர்வு செய்வதற்கான பக்கம் திரையில் தோன்றும் . அதில் Circle தமிழ்நாடு என்றும் Division applying for என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளீடு செய்த முகவரியில் அடிப்படையில் Divisions உங்களுக்கு காண்பிக்கப்படும்.
Step : 7 - நீங்கள் தேர்வு செய்யும் பகுதியை பொருத்து பணியிடம் காலியாக உள்ள தபால் நிலையங்களின் பட்டியல் காட்டும். அதில் நீங்கள் விருப்பப்படும் இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். குறைந்தது 5 இடங்கள் தேர்வு செய்யலாம். அதனைத்தொடர்ந்து, கீழே உள்ள Box யை கிளிக் செய்து save and Proceed கொடுக்க வேண்டும்.ஸ்டெப் தற்போது முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை Print கொடுத்து எடுத்து வைத்துகொள்வது நல்லது. பெண்கள், திருநங்கைகள், SC/ST/PwD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
Step : 8 இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி 23.08.2023 ஆகும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment