3,359 காவலர் பணியிடங்கள்... தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு.. - Agri Info

Adding Green to your Life

August 9, 2023

3,359 காவலர் பணியிடங்கள்... தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு..

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைசிறைக் காவலர்,  தீயணைப்பாளர் ஆகிய  காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. 18.08.2023  வரை இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் மற்றும் திருநங்கைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை.

மொத்த காலியிடங்கள்: 3,359

மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்றும், 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் (Wards cum Dependent) பிரிவின் கீழ் நிரப்பப்படும் என்றும், 5% இடங்கள் முன்னாள் இராணுவத்தினர் கீழ் நிரப்பப்படும் என்றும்,  பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:





2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் 18ம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் சமர்பிபிக்லாம்.

தெரிவு செய்யப்படும் முறை: 



தேர்வுக் கட்டணம்: ரூ 250/-

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.

மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment