திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் தொடங்க 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை/வேளாண் பொறியியல் துறையில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் துவங்கிட ஊக்கப்படுத்தும் வகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 1 லட்சம் வழங்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மற்றும் வங்கிக்கடன் உதவியுடன் அக்ரி கிளினிக் போன்ற ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் 21-40 வயதுடைய பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வேளாண் பட்டாதாரிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு (Agreement) உடன்படிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment