ஆரோக்கிய பானங்களில் ஒன்றாக பிரபலமடைந்துள்ளது லெமன் வாட்டர். லெமன் வாட்டரா இது என்ன பெயர் புதுசா இருக்கு என்று யோசிக்கும் முன்பு, பெயர் தான் புதிது! சாதாரணமாக நாம் பருகும் தண்ணீரில் எலுமிச்சை சாறை மிக்ஸ் செய்து தயாரிக்கப்படுவதைத் தான் குறிக்கிறது.
எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் சிம்பிள் ட்ரின்க்காண லெமன் வாட்டர். இதில் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறின் அளவு அவரவர் விருப்பத்தை பொறுத்தது ஆகும். வெதுவெதுப்பான நீரில் தயார் செய்யப்படும் இதை காலை எழுந்தவுடன் குடிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிலர் இதில் புதினா இலை, தேன் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள். காலை நேரத்தில் இதைக் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
ஹைட்ரேஷன்: இரவு நேரத்தின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு காலை எழுந்தவுடன் உங்கள் நாளை உற்சாகமாக துவங்க மற்றும் ஆற்றலை அதிகரிக்க நம் உடலை ரீஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கு காலை நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். காலை எழுந்தவுடன் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் அல்லது ஸ்லைசை சேர்ப்பதன் மூலம் அது ஆரோக்கியமானதாக மாறும். மேலும் தண்ணீரில் சுவைக்காக கொஞ்சம் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தினால் நீங்கள் அதிகமாக தண்ணீரை விரும்பி குடிப்பீர்கள். இதனால் உடலில் ஹைட்ரேஷன் லெவலை பராமரிக்க உதவும்.
வைட்டமின் சி: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கிறது எலுமிச்சை. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
செரிமானம் மேம்படும்: லெமன் வாட்டர் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். மேலும் இது உணவை உடைத்து செரிமானத்தை எளிதாக மேம்படுத்த உதவுகிறது. எனினும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும்: எலுமிச்சையின் சிட்ரஸ் பண்புகள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும், செயல்பாட்டில் உள்ள துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும். எனவே காலை நேரத்தில் லெமன் வாட்டர் குடிப்பது சுவாசத்தை புத்துணர்ச்சியடைய செய்து துர்நாற்றத்தை குறைக்கும்.
டீடாக்ஸிஃபிகேஷன்: லெமன் வாட்டர் பெரும்பாலும் டீடாக்ஸிஃபையிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறித்து, மேலும் இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும் லெமன் வாட்டரை தினமும் குடித்தால் மலச்சிக்கலை குணமாகும், நச்சுக்கள் வெளியேறி குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, லெமன் வாட்டர் மட்டுமே தீர்வல்ல. சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்ற பிற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன் சேர்த்து இதனை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment