இரவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலோ காலையில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சிக்கல் அஜீரணம் மற்றும் வயிறு உப்பசம் அல்லது வீக்கம். வாயு பிரச்சனையால் கூட இது போன்ற உணர்வுகள் ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு கைகொடுக்க உதவும் 5 காலை பானங்களை தான் இப்பொது சொல்ல இருக்கிறோம்.
சீரகத் தண்ணீர் : ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டசீரகத் தண்ணீர் நச்சுகளை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. கூடுதலாக, இது உங்கள் குடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்னைகைத் தடுக்கவும் உதவும் கார்மினேடிவ் விளைவுகளைக் கொண்டுள்ளது.
இளஞ்சிவப்பு உப்பு நீர்: இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிங்க் சால்ட் எனப்படும் இளஞ்சிவப்பு உப்பு, மற்றும் சிறிது தேன் சேர்த்து குடிக்கும்போது உத்து உங்கள் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உங்கள் நாளை புத்துணர்வுடன் தொடங்க வலி வகுக்கும். இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் பானங்களில் தேன் சேர்ப்பதை தவிர்க்கலாம்.
மஞ்சள் தேநீர்: மஞ்சள் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு, சிறிது தேன் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம். இதுவும் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வயிற்றுக்கு தீர்வு அளிக்கும்.
வெள்ளரிக்காய்-புதினா நீர் : வெள்ளரிக்காய், புதினா மற்றும் எலுமிச்சையுடன் தண்ணீரை சேர்த்து ஒரு பாட்டில் தயார் செய்து நாள் முழுவதும் பருகவும். புதினா வயிற்றை தணிக்கும் அதே வேளையில், வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
இஞ்சி எலுமிச்சை தேநீர்: இந்தியாவில் தேநீர் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். அதில் பால் சேர்க்காமல் இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து குடிக்கும்போதுவயிற்றில் உள்ள அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் உள்ளிட்ட குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாறும்.
Click here for more Health Tip
0 Comments:
Post a Comment