Search

அரசுப் பள்ளியில் 6,329 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் 6329 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) இந்த ஆள்சேர்க்கையை நடத்துகிறது. 

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பித்தார்கள் கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது. 

காலியிடங்கள்:

டி.ஜி.டி (பட்டதாரி ஆசிரியர்) மற்றும் விடுதி காப்பாளர் (Hostel Warden) பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பதவி காலியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teachers)5660
விடுதி காப்பாளர் (Hostel Warden)669
Total6329

இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் 18.08.2023 ஆகும்.

கல்வித் தகுதி :

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, தொடர்புடைய துறைகளில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும். விடுதி காப்பாளர் பதவிக்கு கட்டாயம் இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ "ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (பேனா காகிதம்)" முறையில் நடத்தப்படும்.

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன. அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 19.07.2023 முதல் 18.08.2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஈ.எம்.ஆர்.எஸ் என்பது பழங்குடியின மாணவர்களுக்குக் குடியிருப்பு அமைப்பில் தரமான கல்வியை வழங்குவதற்கான பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் முக்கியத் தலையீடாகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment