இந்தியன் வங்கி இலவச பயிற்சி; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Education News, Employment News in tamil

August 2, 2023

இந்தியன் வங்கி இலவச பயிற்சி; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குயவர்பாளையம், லெனின் வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், துரித உணவு தயாரிப்பு பற்றி இலவச பயிற்சி வழங்க உள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 8 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். பயிற்சி வரும் 10 ஆம் தேதி துவங்குகிறது.

பயிற்சியில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட, 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். 10 நாள் பயிற்சி அளிக்கப்படும். 90 சதவீதம் செய்முறை பயிற்சி. கிராமப் பகுதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment