இன்றைய உணவுகள் உடலில் நச்சுக்களை தேக்கி வைப்பதாலேயே பல நோய்கள், உபாதைகளை அனுபவிக்கிறோம். உணவின் மூலமாகவே அவ்வப்போது அவற்றை வெளியேற்றிவிடுவது அவசியம். அந்த வகையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் சில டிப்ஸ் உங்களுக்காக...
எலுமிச்சை நீர் : வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அடியோடு வெளியேற்ற உதவும்.
தூக்கம் : நம் உடலின் கழிவுகளை வெளியேற்ற தூக்கத்தை விட சிறந்த வழி எதுவும் இல்லை. ஏனெனில் இரவில் தான் நம் உடலானது கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் நாம் உடலுக்கு முழு ஓய்வு கொடுக்க வேண்டுமெனில் தூக்கம்தான் ஒரே வழி. எனவேதான் இரவு தூக்கம் அவசியம் என்கிறனர். இரவு சரியான துக்கமில்லை எனில் வரும் தொந்தரவுகளுக்கும் இதுவே காரணம்.
குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் : காய்கறிகள், பீன் வகைகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பருப்பு வகைகள், பழழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
உடற்பயிற்சி : ஏரோபிக்ஸ் , ஸூம்பா போன்ற உங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சிகளை செய்தாலே ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும். அவை உங்கள் ஆற்றலை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
தியானம் மற்றும் மூச்சு பயிற்சி : மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்வது உங்களை மனதளவிலும் உடலளவிலும் அமைதியடையச் செய்கிறது. இது உங்களை புத்துணர்ச்சியாக்குகிறது.
காலை குளியல் : காலையில் சீக்கிரமே குளிப்பது உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதோடு உடல் கழிவுகளும் நீங்கி சுத்தமாக உணர்வீர்கள்.
தண்ணீர் அதிகமாக அருந்துங்கள் : இது எளிமையான அதேசமயம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் கழிவுகளை எளிதில் வெளியேற்ற உதவும். உடலுக்கு தண்ணீரை விட சிறந்த நச்சு நீக்கி வேறு எதுவும் இருக்க முடியாது.
உங்களுக்கான தனிமை நேரம் : உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதும் மிகவும் அவசியம். இது உங்கள் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அவசியம்.
Click here to join whatsapp group for daily health tip
Click here for more Health Tip
No comments:
Post a Comment