Search

நம் எலும்புகள் வலுவானதாக இருக்க எவ்வளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து தேவை..?

 நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இத்தகைய எலும்புகளை வலுவானதாக வைத்திருக்க விட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகிய இரண்டு சத்துக்கள் தான் மிக அவசியமாக தேவைப்படுகிறது.

விட்டமின் டி சத்து பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கிறது. நம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள இந்த விட்டமின் டி சத்து உறுதுணையாக அமைகிறது. ஆக உடலில் விட்டமின் டி சத்து போதுமானதாக இல்லை என்றால் எலும்புகளுக்கு கால்சியம் சத்து போய் சேராது.

போதுமான கால்சியம் சத்து கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் பலவீனம் அடையும் மற்றும் காயங்கள் ஏற்படலாம். எலும்புகளை கட்டமைப்பதற்கான அடிப்படை அமைப்பாக கால்சியம் இருக்கிறது. எலும்புகளின் வலு மற்றும் அடர்த்தி ஆகியவற்றுக்கு கால்சியம் இன்றியமையாததாக உள்ளது.

ஆக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து ஆகிய இரண்டுமே மிக அவசியம் தான் என்றாலும், எவ்வளவு சத்து ஒருவருக்கு தேவைப்படும் என்பதே மிக முக்கியமான கேள்வியாக அமைகிறது.

கால்சியத்தின் மூலமாக எலும்புகள் எவ்வாறு பலன் அடைகின்றன ? 

  • நம் உடலில் பெரும்பகுதி கால்சியம் சத்து எலும்புகளில் தான் சேமிக்கப்படுகிறது. அதேபோல பற்கள் வலுவாக இருப்பதற்கும் கால்சியம் சத்து அவசியமாகிறது.
  • வாழ்நாள் முழுவதும் கால்சியம் சத்து தேவை என்றாலும் கூட வளர் இளம் பருவத்திலும், குழந்தை பருவத்திலும் இது மிக மிக அவசியமாகும்.
  • தசைகளை சுருங்கி விரிவடையச் செய்வது, நரம்புகளின் ஆரோக்கியம் மற்றும் ரத்தத்தை உறைய வைப்பது போன்றவற்றிலும் கால்சியத்தின் பங்கு மகத்தானது ஆகும்.
  • விட்டமின் டி சத்தின் பங்கு : 

    • நமது குடலில் இருந்து கால்சியம் சத்தை உடல் உறிஞ்சி கொள்வதற்கு இது உந்து சக்தியாக அமைகிறது.
    • விட்டமின் டி சத்து போதுமானதாக இல்லை என்றால் நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சி கொள்ளாது. இதனால் கால்சியம் குறைபாடு ஏற்படும்.
    • ரத்தத்தில் கால்சியம் சத்து சீராக இருப்பதற்கும் விட்டமின் டி அவசியமாகும். எலும்புகள் மற்றும் ரத்தம் ஆகியவற்றில் கால்சியத்தை தேவையான அளவு வைத்திருக்க இது உதவுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தி, செல்களின் செயல்பாடு போன்றவற்றிற்கும் விட்டமின் டி சத்து அவசியமாகும்.

    எவ்வளவு சத்து தேவை ? 

ஒன்று முதல் 71 வயது வரையிலான நபர்களுக்கு தினசரி 600 IU (International Units) அளவு விட்டமின் டி சத்து அவசியமாகும். இதற்கு மேற்பட்ட வயது பிரிவினருக்கு 800 IU அளவில் விட்டமின் டி சத்து தேவை.

அதேபோல 19 முதல் 50 வயது வரையிலான நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 மிகி அளவு கால்சியம் சத்து தேவை. 51 வயது முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு 1200 மிகி அளவும், 51 வயது முதல் 70 வரையிலான ஆண்களுக்கு 1000 மிகி அளவும், 71 வயதுக்கு பிறகான ஆண்களுக்கு 1200 மிகி அளவும் கால்சியம் சத்து தேவைப்படும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment