தினசரி வொர்க் அவுட் சிறந்ததா...? வீக் எண்ட் வொர்க் அவுட் சிறந்ததா..? ஆச்சரிய தகவல்கள்..! - Agri Info

Adding Green to your Life

August 1, 2023

தினசரி வொர்க் அவுட் சிறந்ததா...? வீக் எண்ட் வொர்க் அவுட் சிறந்ததா..? ஆச்சரிய தகவல்கள்..!

 உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது வார இறுதி நாட்களில் மட்டும் கூடுதலாக உடற்பயிற்சி செய்தால் அதற்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. இதற்கான விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.

வாழ்க்கை முறை மாறியதாலும், போதிய உடற்பயிற்சி இன்மையாலும், இந்தியாவில் 10 கோடி பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 2035-ஆம் ஆண்டில் இந்தியாவில் உடல் பருமனால் சுமார் 14 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் என்பது வாழ்வியல் நோய்களுக்கு விருந்து வைப்பது போன்றது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதில் இருந்து தப்பிப்பதற்கு உடற்பயிற்சி மட்டுமே தீர்வு என்று கூறினாலும், அதனை தினசரி செய்வதில் தான் நம்மில் 90% பேர் தோற்றுப் போகிறோம். . வாரத்தில் 7 நாளும் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே பலன், அது நம்மால் முடியாது என்று பலரும் நினைக்கிறோம்.

ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள சிடிசி ஆய்வு முடிவு ஆச்சர்யமளிக்கும் வகையில் உள்ளது. அதாவது, 90 ஆயிரம் பேரை இரு அணிகளாக பிரித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு அணியினரை வாரத்தில் ஏழு நாளும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தி ஆய்வுசெய்தனர். மற்றொரு அணியினரை வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வைத்தனர். அப்போது, இருவரிடமும் ஒரே மாதிரியான பலன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, வாரத்தில் ஏழு நாட்களும் 30 நிமிடங்கள் வரை வொர்க்அவுட்களில் ஈடுபட்டாலும், வார இறுதி நாட்களில் மட்டும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

இதன்மூலம், உங்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய முடிவதோடு, வாழ்வியல் நோய்களில் இருந்து இன்றைய தலைமுறையினர் தற்காத்துக் கொள்ள முடியும் வாய்ப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஜிம்மில் 2 நாட்கள் strength trainingம், 2 நாட்கள் கார்டியோவும் (cardio) செய்வது போதுமானது.

ஆனால், உடல் எடையை குறைக்கவும், பாடி பில்டிங்குக்கும் அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தசைகளை கட்டமைப்பது உங்கள் நோக்கம் என்றால் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் ஒர்க் அவுட்கள் செய்வது போதுமானது.

இத்துடன் சத்தான உணவுகளையும், பழங்களையும் எடுத்துக்கொண்டால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், வாரத்தில் இரண்டு நாட்கள் உடல்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற பழக்கத்தை கொண்டுவருவது எளிதானது அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்பவர்களிடம், உடல், மனம் புத்துணர்வு பெறுவதைப் போல, மனஅழுத்தமும் வெகுவாகக் குறைகிறது. ஆனால், வாரத்தில் இரு நாட்கள் மட்டும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் அதை கடைப்பிடிப்பது பெரும் சவாலாக இருப்பதுடன், குறைந்த அளவு நிர்பந்தப்படுத்தும் நிலைக்கு தங்களை தாங்களே உட்படுத்திக் கொள்ள நேரிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment