அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் இப்படிதான் இருப்பார்கள்..! - Agri Info

Adding Green to your Life

August 15, 2023

அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் இப்படிதான் இருப்பார்கள்..!

 சமூகத்தில் ஒரு சிலர் மிகவும் தனித்துவமாக, நேர்த்தியாக, பார்க்கும் போதே அதிசயிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஒரு சில பெண்களைப் பார்க்கும் போது ஒரு ரோல் மாடலைப் போலக் காண்பார்கள். இவ்வாறு தனித்துவமாக இருக்கும் பெண்களுக்கு என்று ஒரு சில பிரத்யேகமான பழக்கங்கள் மற்றும் குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. அவ்வாறு தன்னம்பிக்கையுடன் வலம் வரும் பெண்களிடம் காணப்படும் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

தன்னைத் தானே அறிந்து கொள்வது : உங்களைச் சுற்றி இருப்பதை புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, உங்களைப் புரிந்து கொள்வதும் அதே அளவுக்கு முக்கியம். நீங்கள் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்கள், உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு எழுதலாம். அல்லது உங்களின் ஏற்ற இறக்கமான உணர்வுகளை பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிரலாம். இதன் மூலம் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவும். தன்னுடைய பலவீனங்களை அறிந்தவர்களுக்கு தன்னம்பிக்கை குறையாது.

பாசிடிவ்வாக நினைப்பது : எப்போதுமே நேர்மறையான உணர்வுகள், சிந்தனைகள் தோன்றாது. பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் எண்ணங்கள் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. ஆனால் அதிக தன்னம்பிக்கைக் கொண்ட பெண்களைப் பார்க்கும் போது, அவர்கள் சவாலான, சிக்கலான சூழ்நிலைகளைக் கூட, அதை எதிர்கொள்வது எப்படி என்று நேர்மறையாக சிந்திப்பார்கள்.
இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவார்கள் : பொதுவாகவே வாழ்வில் முன்னேறுவதற்கு நமக்கு என்று தனிப்பட்ட இலக்குகள் மற்றும் லட்சியங்கள் இருக்க வேண்டும். இலக்குகள் இல்லாமல் தோன்றியதையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் பெண்கள் சின்ன சின்னதாக இலக்குகளை நிர்ணயித்து அதை ஒவ்வொன்றாக அடைந்து நிதானமாக முன்னேறிச் செல்வார்கள். இதன் மூலம், மிகப்பெரிய விஷயங்களைக் கூட படிப்படியாக சாதிக்க முடியும்.

கனிவாக இருப்பார்கள், உதவி செய்ய தயங்க மாட்டார்கள் : தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கு நீங்கள் பொதுவாகவே அன்பாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும் மற்றும் மேலும் தயங்காமல் உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். இந்த இரண்டு பழக்கமுமே உங்களுடைய தன்னம்பிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கும். ஸெல்ப் கான்பிடன்ஸ் அதிகமாக இருக்கும் பெண்களிடம் இதை கண்கூடாக பார்க்கலாம்.

நேர்த்தியான, பொருத்தமான ஆடை அணுவது : ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகமான தன்னம்பிக்கை என்பது ஒருவருடைய தோற்றத்தில் வெளிப்படும். அதில் நாம் எந்த ஆடைகளை தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளை நேர்த்தியாக அணிவார்கள். இது டிரெண்டில் இருக்கிறது, இதுதான் இப்போது ஸ்டைல் என்று பொருத்தமில்லாத ஆடைகளை தேர்வு செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment