நைட் ஷிஃப்ட் வேலை செய்வது நல்லதா..? என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்..? - Agri Info

Adding Green to your Life

August 1, 2023

நைட் ஷிஃப்ட் வேலை செய்வது நல்லதா..? என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்..?

 காலை 9 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடியும் அலுவலக பணி நிமித்த வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒட்டுமொத்த உலகமும் பணி நிமித்தமாக 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அவரவர்க்கு கிடைத்த மற்றும் விரும்பிய நேரங்களில் பணி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்து காத்திருக்கும் ஆந்தையைப் போல இரவு பணி செய்வதையே சௌகரியமானதாக சிலர் கருதுகின்றனர். அதே சமயம் அதிகாலையில் எழுந்து கீச், கீச் என்று ரீங்காரமிடும் குருவிகளைப் போல காலைப் பொழுதில் வேலை செய்வதை சிலர் விரும்புகின்றனர். இரவில் நிலவும் சத்தமின்றி நீடிக்கும் அமைதியை பயன்படுத்திக் கொண்டு சிறப்பான பணித்திறனை ஒரு சாரர் வெளிப்படுத்துகின்றனர். புத்தாக்க சிந்தனையும், எச்சரிக்கை உணர்வும் இரவு நேரங்களில் மேலோங்கி நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் அதிகாலையில் எழுந்து பணி செய்யும் போது நமக்கான ஒழுக்கம் அதிகரிக்கிறது என்றும், தூக்க அனுபவங்கள் சிறப்பாக அமைகிறது என்றும் மற்றொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தூக்கத்திற்கான மருத்துவ துறை மூத்த நிபுணர் Navneet Sood அவர்களிடம் கேட்டபோது, “இரவில் ஆந்தையைப் போல வேலை செய்வதா அல்லது காலையில் குருவியை போல வேலை செய்வதா என்பது ஒவ்வொரு தனி நபரின் விருப்பம் மற்றும் அவர்களது வாழ்வியல் தேவையை பொறுத்து அமைகின்றது. மேலும் அவரவர் ஜெனிடிக்ஸை பொருத்தும் இந்த விஷயம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இரவில் பணி செய்பவர்களின் செயல் திறன் என்பது மாலை நேரங்களில் மிகக் கூடுதலாக இருக்கும். அதேசமயம் காலையில் வேலை செய்பவர்கள் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்வார்கள்”. என்று தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவ நிபுணர் ஹரி கிஷன், மேற்கண்ட இதய கருத்துக்களை ஆமோதித்தார். அதேசமயம் இரவு பணி மற்றும் அதிகாலைப் பணி ஆகிய இரண்டிலும் அறிவியல் ரீதியாக சில பலன்களும், பாதக அம்சங்களும் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இரவில் வெகு நேரம் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கு, அதிகாலையில் எழுவது என்பது மிக சிரமமான காரியமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல காலைப் பொழுதில் விறுவிறுப்பாக வேலை செய்பவர்கள் இரவில் வெகு முன்னதாகவே தூங்கச் சென்று விடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

நாம் செய்யும் வேலையைப் பொறுத்து இரவு பணி அல்லது காலை நேர பணி என்பது அமைந்தாலும், நம் உடல்வாகு எந்த பணி நிமித்தத்தோடு ஒத்துப் போகிறது என்பதனை பொறுத்து நமக்கான வேலையை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்த வேலையை செய்தாலும் நம் உடலுக்கு போதுமான அளவு தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment