சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று எல்லாருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். ஆனால், பலராலும் அதை நிறைவேற்ற முடியாது. நாம் தொழில் செய்தால் லாபம் ஈட்டமுடியுமா என சிலர் தயங்குவார்கள். அதனால்தான் உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு ஆர்வம் இருக்கும் தொழிலில் ஈடுபடுங்கள் என்று கூறுகிறோம். உங்களுக்கு நன்றாக சமைக்க வருமென்றால், டிபன் சேவை தொழில் உங்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இதற்கு குறைவான முதலீடே தேவைப்படும். வீட்டிலிருந்தே கூட இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம்.
டிபன் சேவை என்றால் என்ன?
இதுவொன்றும் பெரிய சிக்கலான தொழில் அல்ல; மிகவும் எளிமையான தொழில்தான். வீட்டைவிட்டு வெளியூரில் வசிப்பவர்களுக்கு, தனியாக தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுவையான, சத்தான, பிரெஷான உணவை நீங்கள் வழங்கலாம். பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்களும் மாணவர்களும் தான் உங்களின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். உங்கள் டிபன் தொழில் வெற்றிகரமாக செல்ல வேண்டுமென்றால், சத்தான வீட்டுச் சமையலை நீங்கள் கொடுக்க வேண்டியது அவசியம்.
எப்படி தொடங்குவது?
உங்கள் வீட்டிலிருந்தே டிபன் சேவை அல்லது டப்பாவாலா தொழிலை தொடங்க விரும்பினால், சமைப்பதற்கும் டிபன்களை மொத்தமாக அடுக்கி வைப்பதற்கும் போதுமான இடவசதி இருக்க வேண்டும். சாதாரணமாக நம் வீட்டு சமையலறையில் 20 முதல் 30 பேருக்கு உண்டான உணவுகளை தயார் செய்யலாம். நாளடைவில் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40-க்கும் மேல் இருந்தால், உங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும்.
மார்கெட்டிங்:
டப்பாவாலா அல்லது டிபன் சேவை தொழில்கள் வாய்வழி விளம்பரத்தின் மூலம்தான் பெரும்பாலும் பிரபலமடையும். உங்கள் உணவைப் பற்றி மக்கள் நல்லவிதமாக கூறினால், உங்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் தொழில் குறித்து சமூக ஊடகத்திலும் விளம்பரம் செய்யலாம். உள்ளூர் அளவில் இருக்கும் சிறிய தொழில்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
உங்கள் டிபன் சேவை தொழிலுக்கென்று தனியாக வலைதளம் தொடங்கலாம். அல்லது, உங்கள் உணவின் புகைபடங்களை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் பதிவிடலாம். இதனால் உங்களின் டிபன் தொழில் குறித்து பலருக்கும் தெரிய வரும். கூகுளில் விளம்பரங்கள் செய்வதாலும் உங்கள் தொழில் பெருகும். இன்றைய காலத்தில் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் கூட இந்த டிபன் சேவை தொழிலை திறம்பட நடத்தி வருகிறார்கள்.
முதலீடு:.
வழக்கமான சாப்பாடு என்பது கொஞ்சம் சாதம், சப்பாத்தி, கொஞ்சம் பருப்பு கடையல், கொஞ்சம் கூட்டு சில சமயங்களில் சாலட். இதைதான் நீங்கள் டிபனில் கொடுக்கப் போகிறீர்கள். செலவை கணக்கிடுவதற்கு முன்பு இதை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப முதலீடுகளுக்கும் அதற்குப் பிறகான பணத் தேவைகளுக்கும் உங்கள் கைகளில் இருந்துதான் செலவழிக்க வேண்டியிருக்கும். சமையல் பாத்திரங்கள், அடுப்புகள் மற்றும் பிற பொருட்கள் வாங்க எப்படியும் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். வாடிக்கையாளர்கள் அதிகமானால் உங்களுக்கு வரக்கூடிய வருமானமும் அதிகரிக்கும்.
உணவு மற்றும் பாதுகாப்பு உரிமம்:
உங்கள் டிபன் தொழில் நல்லபடியாக சென்று கொண்டிருந்தால் தான், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்(FSSAI) உங்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உரிமத்தை வழங்கும். எனினும், வருடத்திற்கு ரூ.12 லட்சம் அல்லது அதற்கு மேலும் வருமானம் ஈட்டக் கூடிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் தேவைப்படும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment