திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி பெருமாள்புரம் பி.குடியிருப்பு பகுதியில் உள்ளது. இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகத் திறமை வாய்ந்த கலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இதற்கு கல்வி தகுதியாக குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்காக இப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு இலவச புத்தகம், கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், ரயில் சலுகை கட்டணம் வசதி வழங்கப்படுகிறது.ஒரு வருடத்திற்கு பயிற்சி கட்டணமாக ரூபாய் 350 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செல்வ முத்துக்குமாரி கூறுகையில், "நிறைய மாணவர்கள் இசை பள்ளியில் படித்து முடித்துவிட்டு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகின்றனர். 1997 முதல் நெல்லை மாவட்டத்தில் இசைப்பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. இசைப்பள்ளி ஆரம்பிக்கும் பொழுது குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் ஆகிய துறைகள் மட்டுமே இருந்தன. பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வயலின், மிருதங்கம் சேர்க்கப்பட்டன.
இங்கு நாதஸ்வரம் துறையில் படித்து முடித்த மாணவர்கள் இந்து அறநிலைத்துறை கோயில்களில் பணிபுரிகின்றனர். தேவாரம் துறையில் படித்து முடித்தவர்கள் ஓதுவாராக நிறைய கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர். தவில், வயலின் உள்ளிட்ட துறைகளை முடித்த மாணவர்களுக்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஏழு துறைகளிலும் படித்து முடித்தவர்கள் கவர்மெண்ட் வேலைகளில் மட்டுமல்லாமல்அரசு தனியார் பள்ளிகளில் அதனை கற்றுக் கொடுக்கும்ஆசிரியராகவும் உள்ளனர். மேலும் நாட்டிய பள்ளி வைத்து தனியாகவும் அவர்கள் நடத்தி வருகின்றனர்" என அவர் தெரிவித்தார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment