நாள்பட்ட நோய்கள் பலவற்றிற்கு செரிமானமே மூல காரணம் என்று கூறப்படுகிறது. உன் வயிற்றின் ஆரோக்கியம் தான் உன் வாழ்க்கை ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்று சொல்வதை கூட கேட்டிருப்போம். வயிற்றின் ஆரோக்கியம் என்பது சரியான செரிமானம், வயிற்றின் ஆமிலத்தன்மை, குடல் ஆரோக்கியம் என அனைத்தையும் குறிக்கும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இது நமக்கு வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நம்மில் பெரும்பாலோர் நம் நாளை தவறான வழியில் தொடங்குவதாகும். நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். வெறும் வயிற்றில் நாம் அறியாமல் பலவற்றை உட்கொள்கிறோம், இது செரிமான செயல்முறையை தீவிரமாக பாதிக்கும். இதனால் நாள் முழுவதும் வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
இப்போது, காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சத்தான மற்றும் உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கும் சூடான உணவுகளை காலையில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
காலையில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே நீங்கள் குளிர்ச்சியான மற்றும் செரிக்க சிரமமாக இருக்கும் உணவுகளை உட்கொண்டால், அவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதோடு உடலை சோர்வடைய செய்யும். எனவே காளையின் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளை சொல்கிறோம்.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க பொதுவாக உட்கொள்ளப்படும் பானங்களில் எலுமிச்சை நீரும் ஒன்று. உடல் எடையைக் குறைக்க மக்கள் இதை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் இந்த பானம் அமிலத்தன்மை கொண்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. இதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு சிட்ரிக் அமிலம் சேர்ந்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
புரோட்டீன் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து, ஆனால் அதை ஜீரணிக்க நமது செரிமான அமைப்பு கடினமாக உழைக்க வேண்டும். அதிக நேரமும் எடுக்கும். வெறும் வயிற்றில் புரதத்தை உட்கொள்வது மேலும் உங்களை பலவீனப்படுத்தும். வயிற்றில் வாயு, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வெறும் வற்றில் சமிடுவதை தவிர்த்து காலை மற்றும் மதிய உணவில் நல்ல புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்தால் அது கொழுப்பை எரிக்க உதவும் என்று நம்பி பலர் குடிக்கின்றனர். ஆனால் தேனில் அதிக கலோரிகள் உள்ளன மற்றும் சர்க்கரையை விட கிளைசெமிக் குறியீட்டில் அதிகமாக உள்ளது. அதோடு தூய தேனைக் கண்டுபிடிப்பது கடினம் மற்றும் பெரும்பாலானவர்கள் தேன் என்ற பெயரில் சர்க்கரை பாகை சாப்பிடுகிறார்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை தான் ஏற்படுத்தும்.
பலர் காலையில் ஜூஸ்கள், ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற பானங்களை உட்கொள்வதால், உடலை நச்சுத்தன்மையை நீக்க முயல்கிறார்கள். ஆனால் அவை குளிர்ச்சியாக இருப்பதால், அது நமது செரிமானத்திற்கு நல்லதல்ல. அவை செரிமான நெருப்பை மெதுவாக்கும் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் பாதிக்கின்றன. இதனுடன், உடலில் கப தோஷம் அதிகரிக்கிறது. இது தவிர சளி, இருமல் போன்றவற்றையும் உண்டாக்கும்.
No comments:
Post a Comment