கொலஸ்ட்ரால் அதிகமானால் இந்த அறிகுறிகள் தான் முதலில் தெரியும்... லேசுல விட்டுடாதீங்க..! - Agri Info

Adding Green to your Life

August 3, 2023

கொலஸ்ட்ரால் அதிகமானால் இந்த அறிகுறிகள் தான் முதலில் தெரியும்... லேசுல விட்டுடாதீங்க..!

 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு கேடு விளைவுக்கும் என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க நமது ரத்தத்திற்கு மெழுகு போன்ற ஒரு பொருளான கொலஸ்ட்ரால் அவசியம்.

எனினும், நம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது தான் இதய நோய்களை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலால் உருவாக்கப்படும் மெழுகு போன்ற கொழுப்பு மாதிரியான ஒரு பொருள். இது வைட்டமின் டி, பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் செல் சுவர்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் நீரில் கரையாது. அதேபோல அதனால் தனித்து உடலில் எங்கும் செல்ல இயலாது.

இன்று உலக அளவில் பலமக்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு சில குணப்படுத்த கூடியவையாகவும், ஒரு சில தவிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன. நல்ல உணவு மூலமாகவும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் அதிக கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம்.

எந்த ஒரு நோயையுமே ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது அதற்கான தீர்வை எளிதாக்கும். ஒரு சிலர் தங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். ஆகவே, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பார்க்கலாம்.

  • கை கால் மரத்து போவது: அதிக கொலஸ்ட்ரால் நரம்பைகளை பாதிப்பதால் கை மற்றும் கால்களில் கூசுவது போன்ற உணர்வு அல்லது மரத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் ஒரு பகுதியில் தேங்கும்போது அங்கு ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் மரத்து போன உணர்வு உண்டாகிறது.
  • மூச்சு விடுவதில் சிரமம்: அதிக கொலஸ்ட்ரால் உட்பட பல இதய நோய்களுக்குான முக்கிய அறிகுறியாக மூச்சு திணறல் கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் (arteries) தேங்குவதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த மூச்சுத் திணறல் உண்டாகிறது.
  • நெஞ்சு வலி: அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் உள்ள பெரும்பாலான நபர்கள் நெஞ்சில் ஒருவிதமான அசௌகரியத்தை அனுபவிப்பதாக கூறுகின்றனர். தமனிகளில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேங்கி, அங்கு அடைப்புகளை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
  • சோர்வு: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் பெரும்பாலான நபர்கள் அதிகப்படியான சோர்வை அனுபவிக்கின்றனர். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் பொழுது தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதன் காரணமாகவே இந்த சோர்வு உண்டாகிறது.
  • உயர் ரத்த அழுத்தம்: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகப்படியாக படியும் பொழுது, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகிறது.
  • கண்பார்வை சார்ந்த கோளாறுகள்: அதிகப்படியான கொலஸ்ட்ரால் நேரடியாக நமது கண் பார்வையை பாதிக்கக்கூடும். ரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து கண் சார்ந்த பிரச்சனைகள் உருவாகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment