Search

தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிஞ்சுக்கோங்க.. சிறப்பு அம்சங்கள் இதுதான்!

 தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது குறைவான முதலீட்டை கொண்டு நமது ஓய்வு காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்துகின்ற சேமிப்பு திட்டமாகும். நமக்கான வருமானம் நின்று போகின்ற ஓய்வு காலத்தை நாம் பொன்னான வகையில் கழிப்பதற்கு இந்த திட்டம் உதவிகரமாக அமையும்.

ஓய்வு காலத்தில் நமக்கு நிலையான வருமானம் ஏற்படுத்திடும் வகையில் தற்போதையிலிருந்து குறிப்பிட்ட தொகையை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நாம் முதலீடு செய்ய முடியும். தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது டயர் 1 மற்றும் டயர் 2 என்று இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.

டயர் 1 திட்டம் என்பது கட்டாய ஓய்வூதிய திட்டமாகும். பணத்தை திரும்ப பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை இது கொண்டுள்ளது. டயர்2 என்பது பணத்தை திரும்ப பெற தளர்வுகளை கொண்ட சேமிப்பு திட்டமாகும். பயனாளிக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததும், ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து முதிர்வு அடைந்த தொகையில் 40 சதவீத பணத்தை கொண்டு, ஏதேனும் ஒரு வாழ்க்கை காப்பீடு நிறுவனத்தில் ஆனுய்டி திட்டத்தில் சேருவது கட்டாயமாகும். எஞ்சியுள்ள 60 சதவீத சேமிப்பு தொகையை வட்டி மற்றும் வரிவிலக்கு ஆகியவற்றுடன் பயனாளிகள் திரும்ப பெற முடியும்.

ஓய்வுபெற்ற 60 வயதில் இந்த தொகையை திரும்ப பெற பயனாளர் விரும்பவில்லை என்றால் 70 வயதில் இதை பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும் 40 சதவீத பணத்தை கொண்டு ஆனுய்டி திட்டத்தில் சேருவது கட்டாயமாகும்.

அதேபோல 60 வயதுக்கு முன்பாகவே இந்த திட்டத்தில் இருந்து பயனாளர் விலக வேண்டும் என்று விரும்பினால் சேமிப்பு பணத்தில் 20 சதவீத தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். எஞ்சியுள்ள 80 சதவீத பணத்தை கொண்டு ஆனுய்டி திட்டத்தில் சேர வேண்டியிருக்கும். ஓய்வு காலத்தில் இருந்து குறிப்பிட்ட வருமானம் கிடைப்பதை அது உறுதி செய்யும்.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் : 

1. தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிதி மேலாண்மை செலவு கட்டணம் என்பது 0.03 சதவீதம் முதல் 0.09 சதவீதமாக உள்ளது.

2. Equity Exposure என்பது வயது தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் 25 சதவீதம் முதல் 75 சதவீதமாக உள்ளது.

3. NAV என்னும் Net Asset மதிப்பை விண்ணப்பித்து அதே நாளில் பெறும் வசதி இருக்கிறது.

4. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

5. ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு போன்ற மாற்று முதலீடுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

6. குறைந்தபட்சம் 3 ஆண்டுகால முதலீடு செய்திருந்து, 60 வயது பூர்த்தி அடைந்தால் ஓய்வூதியம் பெற்று கொள்ளலாம்.

7. நாம் வாழும் நகரம் மற்றும் வேலை செய்யும் நிறுவனம் ஆகியவை மாறும் போது, இந்த திட்டம் ரத்து ஆகிவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் PRAN எண் அடிப்படையில் நாம் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

0 Comments:

Post a Comment