இந்திய மக்களின் வாழ்வியலுடன் டீ எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிகாலையில் வீட்டில் எழுந்த உடனேயே பல் துலக்கி கம கமவென்ற மணத்துடன் டீ அருந்தாவிட்டால் நம் மக்களுக்கு அன்றைய பொழுதே தொடங்காது.
வீட்டில் டீ அருந்திய கையோடு அன்றைய பொழுது கழிந்து விடாது. ஒவ்வொரு தெருவிலும், திரும்பிப் பார்க்கும் திசையிலும் எண்ணற்ற டீக்கடைகள் இருக்கின்றன. அவை அத்தனையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கோடை வெயில் சுட்டெரிக்கும் சமயத்திலும் கூட சூடாக டீ அருந்தும் பழக்கம் பலருக்கு உண்டு. நம் மக்கள் இந்த அளவுக்கு தீராத மோகம் கொண்ட டீயை மாலை நேரத்தில் அருந்தலாமா என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம்.
மாலையில் டீ அருந்தக்கூடாது..! நீங்கள் டீ பிரியராக இருக்கலாம், நேரம் காலம் பார்க்காமல் டீ அருந்துபவராக இருக்கலாம். ஆனால் மாலை நேரத்தில் டீ அருந்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கம் மற்றும் கல்லீரல் சுத்திகரிப்பு : நாம் தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்பாகவே டீ மற்றும் காஃபைன் பானங்களை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் சவாலியா அறிவுறுத்துகிறார். நிம்மதியான தூக்கம், கல்லீரலில் நச்சுக்களை உடல் சுத்திகரிப்பது, அழற்சி தடுப்பு, ஆரோக்கியமான செரிமானம் ஆகியவற்றுக்கு இது உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆரோக்கியம் தரும் பிளாக் டீ : நம் மக்களில் பலருக்கு பிளாக் டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது. பாலிஃபினால்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் செல்களின் சிதைவு மற்றும் அலர்ஜி போன்றவற்றை இது தடுக்கும்.
பால் கலந்தால் என்ன ஆகும்.? இருப்பினும் டீ என்றாலே அதில் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பிரதானமாக இந்தியர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் டீ யில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுபடுகின்றன. அதன் முழுமையான பலன் நமக்கு கிடைப்பதில்லை.
சுவை மாறுகிறது - இயல்பாக பார்த்தால் டீ லேசான கசப்பு சுவை கொண்டது. பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கும்போது இது இனிப்பு தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சுவை மற்றும் தன்மை மாறுபட்டு விடுகிறது.
பிளாக் டீ-யே சிறப்பானது... டீயுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கும்போது அதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட் சத்துக்கள் மாறுபடுகின்றன. நேரடியாக டீ அருந்தும் போது கிடைக்கும் புத்துணர்ச்சியை காட்டிலும் பால் கலந்து குடிக்கும் போது குறைவான புத்துணர்ச்சியே நமக்கு கிடைக்கும்.
0 Comments:
Post a Comment