இந்தியாவில் ஒரு நம்பிக்கைக்குரிய சிறு வணிக யோசனையை நீங்கள் தேடும் நபர் என்றால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழில் முயற்சியைத் தொடங்குவது சரியானதாக இருக்கும். குறைந்த தடைகள் கொண்ட இந்த தொழிலானது, அபரிவிதமான வளர்ச்சித் திறனுடன்,தொழில்முனைவோருக்கு பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களை ஆராய்ந்து அதன் முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்வோம்.
சந்தை வாய்ப்பு:
இஞ்சி-பூண்டு பேஸ்ட்டுக்கான இந்திய சந்தை பரந்து விரிந்து வளர்ந்து வருகிறது. இவை நாடு முழுவதும் உள்ள வீடுகளிலும், உணவகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்த தயாராக உள்ள பொருள்களுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பதிவு செய்வதற்கான தேவைகள்:
இந்த முயற்சியில் இறங்குவதற்கு முன், உங்கள் வணிகத்திற்கான அத்தியாவசியப் பதிவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி, MSME/SSI மற்றும் வர்த்தகப் பதிவுகளைப் பெறுவது முக்கியமானதாகும். கூடுதலாக, உணவுப் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்த FSSAI உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும்.
உற்பத்தி செய்முறை:
இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரிப்பது ஒப்பீட்டளவில் எளிமையானது. ஏனெனில் இதற்கு இஞ்சி, பூண்டு ஆகிய இரு பொருள்கள் மட்டுமே தேவை. கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு இது மிகவும் எளிமையானதாக இருக்கும். சரியான பேக்கேஜிங், திறனான சந்தைப்படுத்தல் யுத்திகள் மூலம், நீங்கள் இந்த முயற்சியை லாபகரமான மாற்றலாம்.
தொடக்க செலவுகள்:
இந்த வணிகத்திற்கான ஆரம்ப முதலீடு பொதுவாக ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கும். இயந்திரங்கள், அத்தியாவசிய கருவிகள், பேக்கேஜிங் பொருள்கள், மூலப்பொருள்கள் ஆகியவற்றின் விலை இதில் அடங்கும். முதலில் சிறிதாகத் தொடங்கி பின்னர் அதை விரிவுபடுத்தினால் போதுமானதாகும். ஆர்டர்கள் பொறுத்து தயாரிப்பினை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
லாபம்:
இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழில் வாயிலாக மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை லாபம் ஈட்டலாம். ஆண்டுக்கு, இது 6 முதல் 7 லட்சம் ரூபாய் எனும் ஈர்க்கக்கூடிய வருமானமாக இருக்கும்.
அரசு உதவி:
ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்க பல்வேறு அரசு உதவி திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் நிதி உதவி, பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை அரசு குழுக்கள் வழங்குகின்றன. இது உங்கள் இஞ்சி-பூண்டு பேஸ்ட் வணிகத்திற்கு மதிப்புமிக்க ஊக்கத்தை அளிக்கும்.
வெற்றி என்பது திறமையான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை சார்ந்துள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நுகர்வோர் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, தரத்தை பராமரிப்பது சந்தையில் உங்கள் தயாரிப்புக்கு என தனிபெயர் பெற்று தரும். உங்களுக்கு சமையல் சந்தோசத்தில் ஆர்வம் இருந்தால் மற்றும் பலனளிக்கும் தொழில் முனைவோர் பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழிலில் முதலீடு செய்யுங்கள்.
No comments:
Post a Comment