நமது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும், இதய நலனை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் சீரான உடர்பயிற்சி முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். மிதமான உடற்பயிற்சி எப்போதும் நமக்கு நன்மையையே தரும்.
ஆனால் அதேசமயத்தில், தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகளையும், அதனால் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு இவ்வுளவுதான் முடியும் என்ற வரம்புகள் இருக்கும். அதையும் மீறி, ஓய்வில்லாமல் உடற்பயிற்சி செய்தால், மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமுள்ளது.
மிதமான உடற்பயிற்சி செய்வதால் நம்முடைய இதயத் துடிப்பு சீராக இருக்கும். ஆனால் தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டால், எதிர்வினைகள் பயங்கரமாக இருக்கும். மேலும் அதிகப்படியான தீவிர உடற்பயிற்சியால், சில நோய்க்குறிகளும் தென்படும். உதாரணமக, நம் உடல் வரம்பையும் மீறி எந்த ஓய்வும் இல்லாமல், தொடர்ச்சியாக தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு நாள்பட்ட சோர்வும், செயல்திறனில் குறைபாடும் ஏற்படும்.
தீவிர உடற்பயிற்சி செய்வதால் நம் இதயத்தின் மின்சார அமைப்பில் தற்காலிகமாக தொந்தரவு ஏற்படுகிறது. இதன் காரணமாக அசாதாரணமான முறையில் இதயம் துடிக்க தொடங்குகிறது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை, நாமே கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும், நாளடைவில் இது மேலறை நடுக்க நோய் அல்லது கீழறை துரித இதயத் துடிப்பு நோய் போன்ற தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும். ஏற்கனவே இதய நோயுள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் என மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு உங்கள் பயிற்சியை தொடங்குங்கள்.
உங்கள் இதயத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல், உடற்பயிற்சி செய்வதன் பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால், சில பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். இதோ சில பரிந்துரைகள்..
- தீவிர உடற்பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமக அதிகப்படுத்துங்கள்: திடீரென உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகப்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில், அதிக உடல் உழைப்பின் ஆபத்தை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை அதிகப்படுத்துங்கள்.
- உங்கள் உடல் கூறுவதை கேளுங்கள்: அதிகப்படியான பயிற்சி செய்வதால் மிகவும் களைப்பாக உணர்வீர்கள். உங்கள் செயல்திறன் குறையும். அல்லது, சில சமயங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதுபோன்ற அறிகுறிகளுக்கு கவனம் கொடுங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். உங்கள் உடல் மீட்டெடுப்பதற்கு சற்று நேரம் கொடுங்கள்.
- அவசியம் ஓய்வு தேவை: தீவிர உடற்பயிற்சிக்கு இடையே உங்கள் உடலை மறுபடியும் மீட்டெடுக்க கொஞ்சம் ஓய்வு தேவை. உங்கள் தசைகள் பழுதடையாமல் இருக்கவும், ஹார்மோன் சரிவிகிதத்தில் இருக்கவும், ஒட்டுமொத்தமாக நம்முடைய இதய நலன் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நம் உடலுக்கு போதுமான ஓய்வு தேவை.
- சரிவிகிதமான உடற்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்: பல்வேறு வகையான பயிற்சிகளை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்தும் பயிற்சி, நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும் பயிற்சி, உங்கள் இதயம் மற்றும் இணைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள திரிபுகளை குறைக்கக் கூடிய குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
- நீர்ச்சத்தை இழக்காதீர்கள்: நம் இதய அமைப்புகள் நன்றாக செயல்படுவதற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் போதும், அதற்கு முன்பும், பின்பும் போதுமான நீர் அருந்துங்கள்.
- எச்சரிக்கை அரிகுறிகளுக்கு கவனம் கொடுங்கள்: உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது அதன் பிறகோ, மார்பில் வலியோ, மூச்சு விடுவதில் சிரமமோ, படபடப்போ, தலைசுற்றலோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.
- தீவிர உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம், நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்பட்டாலும், இதனால் நம் இதயத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நீங்கள் நிச்சியம் தெரிந்திருக்க வேண்டும். எந்தவித உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்னும் அல்லது உடற்பயிற்சி முறையில் ஏதாவது மாறுதல் செய்வதற்கு முன்னும் தகுந்த பயிற்சிபெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment