மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் தொற்றுகளும் படையெடுத்து வந்துவிடும். ஈரப்பதமான யும் அங்கங்கே தேங்கி நிற்கும் நீரும் பல நோய்கள் பரவ காரணமாகின்றன. இதனால் மழைக்காலங்களில் வழக்கத்தை விட நம் உடல்நிலை பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பொதுவாக இந்த சமயங்களில் கண்களில் வெண்படல அழற்சி ஏற்படுகிறது. இதனை “மெட்ராஸ் ஐ” என்றும் கூறுவார்கள். இதனால் உங்கள் கண்கள் சிவந்து, கடுமையான எரிச்சல் உண்டாகும். எளிதில் தொற்றக் கூடிய இதனை, வீட்டு வைத்தியத்தின் மூலமே குணப்படுத்தலாம். இதில் சரியாகாவிட்டால், நீங்கள் கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
தேன் : தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறையவே உள்ளது. ஆகையால் கண்களில் ஏற்படும் தொற்றை சீராக்க தேனை தாராளமாக பயன்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து, அந்த தண்ணீரால் உங்கள் கண்களை கழுவுங்கள். இப்படிச் செய்வதால் கண்களில் ஏற்படக் கூடிய வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர் : கண்களில் ஏற்படும் தொற்றை குணப்படுத்த ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவொரு கிருமிநாசினியாகும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றை சீராக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. இது நம் கண்களை சுத்தப்படுத்துவதோடு குளிர்விக்கவும் செய்கிறது. ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு துளி டோஸ் வாட்டரை இடுங்கள். ஒரு நிமிடத்திற்கு உங்கள் கண்களை அப்படியே மூடி வைத்திருங்கள். இப்படிச் செய்வதால் வலி மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கு குளிர்ச்சித்தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை இது குறைக்கிறது. உருளைக் கிழங்கில் உள்ள பண்புகள் நம் கண்களில் தொற்று ஏற்படாமல் காக்கிறது. மெல்லிய துண்டுகளாக உருளைக் கிழங்கை வெட்டிக் கொள்ளுங்கள். அதை இரவு தூங்குவதற்கு முன் உங்கள் கண்களின் மேல் வையுங்கள். 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். கண்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் இதனால் குறையும்.
துளசி : துளசியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. கண்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை துளசி குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் துளசியை எடுத்து இரவு நேரத்தில் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் அந்த நீரை பயன்படுத்தி, உங்கள் கண்களை சுத்தம் செய்யுங்கள். இப்படியே தொடர்ந்து 3-4 நாட்கள் செய்தால், கண் வலி குறையத் தொடங்கும்.
மஞ்சள்: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால், மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆனால் மஞ்சள், கண் எரிச்சலை குணப்படுத்துமா என பலரும் ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு கிளாஸ் மிதமான சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூளை போட்டு, அதை நன்றாக கிளருங்கள். இப்போது சிறிய காட்டன் பஞ்சை எடுத்து, அதை இந்த மஞ்சள் நீரில் நனைத்து, உங்கள் கண்களை சுத்தப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் கண்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் அகன்று, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
க்ரீன் டீ பேக்ஸ் : இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. ஆகையால் கண்களின் வீக்கத்தையும் வலியையும் இது குறைக்கிறது. மிதமான சுடு தண்ணீரில், க்ரீன் டீ பையை நனைத்து, அதை உங்கள் இரண்டு கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீன் டீ பைகளை ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment