வலுவுடன் கூடிய ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த உடலுக்கு அவசியம். குறிப்பாக நாம் வயதாகும்போது, பால் அல்லது அசைவ உணவுகளை அதிகம் உட்கொள்வது எலும்புக்கு நல்லது என்று கூறுவதுண்டு. ஆனால், இங்கு பல சைவ உணவுகள், எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஃபுட்ஸாக வலம் வருகின்றன. அந்த வகையில், வலுவான எலும்புகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் ஆறு தாவர அடிப்படையிலான சூப்பர் உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.
டோஃபு : சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபு, ஒரு தாவர அடிப்படையிலான சத்தான புரதத்தைக் கொண்டிருக்கும் உணவாகும். இது பால் பொருள்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. இதில் அதிகளவும் கால்சியம், புரதம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. டோஃபுவை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகவும், எலும்பு முறிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
கீரைகள் : தாவர வகையை சார்ந்த கீரைகள் உணவின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. இவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதச்சத்தைக் கொண்டுள்ளன. கீரைகளை சாப்பிடுவது, நம் உடலை வலுவாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சாலடுகள், சாண்ட்விச்கள், கூட்டு பொரியல் என எந்த விதத்திலும் உணவுடன் கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை எந்தவொரு உணவிற்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான சைட் டிஷ்ஷாக அமைகின்றன. அதிகளவு கால்சியம் இதில் நிரம்பியுள்ளதால், எலுப்புகளுக்கு தேவையான வலுவை கீரை உணவுகள் தங்கு தடையின்றி வழங்குகின்றன.
பாதாம்: பாதாம் என்பது ஒரு 'நட்ஸ்' வகைகளில் சுவையானது மட்டுமல்ல; எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும். கால்சியம், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்த பாதாம் பருப்பு, எலும்பின் அடர்த்தியை ஆதரிக்க உதவுகிறது. மேலும், அவற்றின் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. பாதாமில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் ஒட்டுமொத்த எலும்பு வலிமைக்கு பங்களிக்கின்றன.
வீகன் மில்க் : விலங்கில் இருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக, வலுவூட்டப்பட்ட வீகன் மில்க் கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. இந்த பால் பொதுவாக பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது தேங்காய் போன்ற தாவர வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதாகும். லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வலுவூட்டப்பட்ட தாவர பால் ஒரு சிறந்த வழி ஆகும்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி என்பது எலும்பு வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு காய்கறி வகையாகும். அதன் கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு முதன்மையானதாக இருக்கிறது.
No comments:
Post a Comment