தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்று அமையாத ஒரு தேவையாகும். ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மேலும் நமது உடலின் பெரும் பகுதி நீரால் ஆனது. உடலின் ரத்த ஓட்டத்திற்கும் ஜீரணத்திற்கும் ஆரோக்கியமான தசைகளுக்கும் நீர் மிகவும் அவசியம்.
தண்ணீரைக் குடிக்க சரியான வழி :
இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மட்டும் காலம் காலமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்று ஒருவர் சொல்ல, சரி என்று உட்கார்ந்து கொண்டு குடித்தால் கிளாசை இப்படி தூக்கி குடிக்க கூடாது என்று மற்றொருவர் சொல்ல, சரி என்று கிளாசில் வாயை வைத்து குடித்தால் இப்படி குடிப்பது நாகரிகம் அல்ல என்று மற்றொருவர் சொல்ல எனக்கு தண்ணியே வேணாம் என்று சில சமயங்களில் தோன்றும் அளவிற்கு செய்து விடுவார்கள். அவ்வளவு கருத்து வேறுபாடுகள் இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் இருந்து வருகிறது.
இதையும் தாண்டி இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள விரும்பினால், முதலில் நீங்கள் உ.பி அல்லது உ.மு வா என்பதை கண்டறிய வேண்டும். அதாங்க உணவுக்கு பின் தண்ணீர் அருந்துவீர்களா அல்லது உணவு உண்ணும் முன் தண்ணீர் அருந்துவீர்களா என்பதும மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்திலும் இதைப்பற்றி பல தகவல்கள் இருக்கிறது. உணவு உண்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமன்படுத்தி உணவு செரிமானத்தை கடுத்து விடும் என்பது போன்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.எனினும் இன்று வரை யாருக்கும் சரியான விடை தெரிந்த பாடில்லை.
அறிவியல் என்ன சொல்கிறது :
உணவு உண்ட பின் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கும் அல்லது உணவு ஜீரணத்திற்கும் தீங்கு ஏற்படுவதாக எந்த ஒரு ஆய்விலும் இதுவரை கண்டறியவில்லை. ஆனால் அதே சமயத்தில் உணவு ஜீரணத்தின் போது நமக்கு சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆனது அதிகமான நீருடன் அந்த அமிலம் தன்னுடைய உணவை செரிக்கும் திறனை சற்று இழக்கிறது என்பது உண்மைதான்.
உண்ணும் உணவுக்கேற்றபடி தண்ணீர் குடிக்க வேண்டும் :
உண்மையில் நீங்கள் எந்தவிதமான உணவு உட்கொள்ளுகிறீர்கள் என்பதை பொருத்தும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அமைகிறது. உதாரணத்திற்கு நீங்கள் புரதச்சத்து நிறைந்த உணவை உண்டால் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.
நீங்கள் குடிக்கும் தண்ணீர் எப்படிப்பட்டது :
மேற்கண்ட காரணிகளுடன் சேர்த்து நீங்கள் குடிக்கும் தண்ணீரின் தரமும், அதன் தன்மையும் முக்கிய காரணியாக அமைகிறது. காரத்தன்மை அதிகம் உள்ள நீரை குடிக்கும் போது அவை வயிற்றில் உள்ள அமிலங்களை சமன் செய்கின்றன. அதே சமயத்தில் அமிலத்தன்மை உள்ள நீரை பருகும் போது அவை உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன.
மேற்கண்ட தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்த தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவருடைய உடல் அமைப்பை பொருத்தும் அவருடைய உணவு முறையை பொருத்தும் மாறுபடுகிறது இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே யோசித்து அதற்கேற்றபடி உங்கள் தண்ணீர் குடிக்கும் முறையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது?
- தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் உறுப்புகளுக்கு மிகவும் நல்லது உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.
- நீங்கள் காலை உணவு உன்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும். அவ்வாறு இல்லையெனில் உணவு உண்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
- நீங்கள் குளிப்பதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.
0 Comments:
Post a Comment