புதுக்கோட்டையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான SAP. Data Analytics. Artificial Intelligence. Cloud Computing, Digital Marketing மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Multimedia & Animation, 2D, 3D மற்றும் Advanced Level Tally ERP 9 போன்ற பயிற்சிகளை முன்னனி பயிற்சி நிறுவனங்கள் முலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment