வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களா?... கூகுளின் முன்னாள் ஹெச்.ஆர் சொல்லும் சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க! - Agri Info

Adding Green to your Life

August 9, 2023

வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களா?... கூகுளின் முன்னாள் ஹெச்.ஆர் சொல்லும் சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க!

 கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, ஒரே சமயத்தில் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார். அதிலிருந்து கூகுள், மைக்ரோசஃப்ட், அமேஸான், மெட்டா போன்ற நிறுவனங்களும் பலரை பணி நீக்கம் செய்தனர். தற்போதைய பொருளாதார சூழல் தான் இத்தகைய வேலை நீக்கத்திற்கு காரணம் என இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக தற்போது ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

லிங்க்டின் தளத்தின் வழியாக லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி வருகிறார்கள். சிலருக்கு நிறுவனத்திலிருந்து பதில்கள் வந்தாலும், பலரது விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கண்களில் கூட படுவதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு உதவும் விதமாக, ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பித்த நபர்கள், அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுகிறார் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மனிதவள துறை அதிகாரியான நோலன் சர்ச்.

“வேலை தேடி ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு, உங்கள் நிறுவனத்திற்கு இப்படியொரு விண்ணப்பம் அனுப்பியுள்ளேன் என்று கூறி லிங்க்டின் தளத்திலோ அல்லது அந்நிறுவனத்தின் மனிதவள துறை அதிகாரி மற்றும் சிஇஓ-வின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். இப்படிச் செய்வதால் நிச்சியம் உங்கள் விண்ணப்பம் அவர்கள் கண்களில் பட அதிக வாய்ப்புள்ளது” என சர்ச் கூறுகிறார்.

ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அதனால் உங்களுடைய விண்ணப்பம் அவர்கள் கண்ணில் படாமல் கூட போகலாம். ஆனால் சர்ச் கூறியபடி நீங்கள் செய்தால், உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

"நான் DoorDash-ல் பணியாற்றிய சமயத்தில், அந்நிறுவனத்தின் சிஇஓ-விற்கு இதுபோன்ற நிறைய மின்னஞ்சல்கள் வரும். அதையெல்லாம் அவர் எனக்கு அனுப்பிவிடுவார். இப்படி தனிப்பட்ட மின்ஞ்சல்களிலோ அல்லது லிங்க்டின் தளத்தில் குறுஞ்செய்தியோ அனுப்பும் நபர்கள் அனைவரையும் நாங்கள் தொடர்பு கொள்வோம்" என சர்ச் தெரிவிக்கிறார்.

இதுவொரு பெரிய நிறுவனமாயிற்றே; நாம் அனுப்பும் தனிப்பட்ட இ-மெயில், குறுஞ்செய்திகளை எல்லாம் பார்ப்பார்களா என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடாது. இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் கூறுகிறார். நீங்கள் வேலைக்காக அமேஸான் நிறுவனத்தில் விண்ணப்பத்துள்ளீர்கள். அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க ஆண்டி ஜேசிக்கு நீங்கள் இ-மெயில் அனுப்ப விரும்பினால், யாரும் உங்களை மிரட்டப் போவதில்லை. ஆகவே தயங்காமல் இ-மெயில் அனுப்புங்கள்.

தற்போது Continuum நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார் சர்ச். “நீங்கள் அனுப்பும் எல்லா இ-மெயில்களையும் நான் வாசிக்க முடியாமல் போகலாம். ஆனால் என்னுடைய குழுவில் உள்ள யாரோ ஒருவர் உங்கள் இ-மெயிலை பார்த்து அதை மனிதவள துறை அதிகாரிக்கோ அல்லது நிறுவனத்தின் துணை தலைவருக்கோ அனுப்புவார்கள்” என்கிறார் சர்ச்.

இதற்கிடையில், ஜனவரி மாதத்தோடு 12,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தன்னுடைய ஊழியர்களுக்கு அதிகளவு சம்பளம் வழங்கும் நிறுவனமாக அறியப்படுகிறது கூகுள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment