இன்றைய காலகட்டதில் உடல் பருமன், உடல் கொழுப்பு, தொப்பை போன்ற பிரச்சனைகள் ஒரு பொதுவான பிரச்சனை போல மாறிவிட்டது. எல்லாருக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது என்று விட்டுவிட்டு பின்னர் அது உடல் ஆரோக்கியத்திற்கு காரணம் ஆகும்போது அதைக் குறைக்க போராட வேண்டி உள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லா வேலைகளின் விளைவுதான் உடல் எடை அதிகரித்தல். ஆனால், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த கட்டுரையில், எளிமையான முடிரையில் உங்கள் உடல் கொழுப்பைக் குறைபாதற்கான வழிகளை உங்களுக்கு சொல்கிறோம். அதன் செய்முறையைப் பற்றியும் நாங்கள் உங்களுக்குச் கூறப் போகிறோம், அதை உட்கொள்வதன் மூலம் சில நாட்களிலேயே அதன் பலனை உணர்வீர்கள்.
ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். இந்திய உணவுகளில் ஓமம் (Celery) விதைகளுக்கு என்று தனி இடம் உள்ளது. பொதுவாக செரிமான பிரச்சனை இருந்தால் ஓமம் தண்ணீர் குடிக்க சொல்வார்கள் ஆனால் இது எடை குறைபிற்கும் உதவும் என்பது நமக்குத் தெரியாது.
ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடித்தால் இதில் உள்ள தைமால் (Thymol) தொப்பையை குறைக்க உதவும். தைமால் (Thymol) வளர்சிதை (Metabolism) மாற்றத்தை பலப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது.
அதோடு அயோடின் (Iodine), பாஸ்பரஸ் (Phosphorus), கால்சியம் (Calcium) மற்றும் பொட்டாசியம் (Potassium) ஆகியவை இதில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான கூறுகள் ஆகும். அதோடு தினமும் ஓமம் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை மற்றும் வயிறு தொடர்பான பிற நோய்கள் குணமாகும்.மலச்சிக்கலில் (Constipation) இருந்தும் நிவாரணம் தருகிறது.
அதேபோல் வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சிரமப்படுவார்கள், ஓமம் தண்ணீரைப் பயன்படுத்தினால், அதன் விளைவு சில நாட்களில் தெரியும். ஒரு மாதம் தொடர்ந்து ஓமம் தண்ணீரை உபயோகிப்பதன் மூலம் 3-4 கிலோ எடை கண்டிப்பாக குறையும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறு பயன்படுத்துவது? பெட்டர் பலன்களை பெறுவதற்கு ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி பொடியை தண்ணீர் சேர்த்து கலக்கி இந்த கலவையை தினமும் குடித்துவவும். நிச்சயம் உடல் எடை விரைவாகக் குறைவதைக் காண்பீர்கள்.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு ட்ரிங்கை குடிங்க.
0 Comments:
Post a Comment