வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. பட்டப்படிப்பு முடித்தவர்கள் பொதுத்துறை வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 3,049 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
PROBATIONARY OFFICERS/MANAGER TRAINEE
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3,049
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இத முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு:
முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (35), திறனறிதல் (45), கணிதம் (35) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (40) என மொத்தம் 155 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2024 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsonline.ibps.in/crppo13jun23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175.
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Notification_CRP_PO_XIII.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment