SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
Junior Consultant(Infra) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
SAI காலிப்பணியிடங்கள்:
Junior Consultant பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Consultant கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B. Tech / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SAI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Junior Consultant ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
SAI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
Click here for latest employment news
No comments:
Post a Comment