10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீலகிரி ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலை - Agri Info

Adding Green to your Life

September 5, 2023

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீலகிரி ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலை

 தமிழகத்தில் உள்ள வெலிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர் (Lower Division Clerk), பன்னோக்கு பணியாளர் (Multi tasking staff), வாகன ஓட்டுநர் (Civilain Motor Driver) , சமையலர் (Cook), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Attendant) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 

 

கல்வித் தகுதி:

இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் (அல்லது) இந்தியில் வினாடிக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு அடிக்கும் திறன் வேண்டும்.

வாகன ஓட்டுநர் பதவிக்கு (Civil Motor Driver) விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்புத் தேர்ச்சியுடன், கனரக வாகனங்கள் இயக்குவதில் 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பன்னோக்குப் பணியாளர் பதவிக்கு (Multi Tasking staff) விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்பாளர் (Firemen)  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்புத் தேர்ச்சியுடன், கனரக வாகன உரிமை வைத்திருக்க வேண்டும், முதலுதவி பிரிவில் குறைந்தது 6 மாத காலம் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Sukhani பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  12ம் வகுப்புத் தேர்ச்சியுடன் நீச்சல் பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் குறைந்தது 2 ஆண்டுகள்  முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தட்டச்சுப் (Stenographer) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பிரிண்டிங் மெஷின் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தட்டச்சுப் பணியாளர் பதவிக்கு ரூ. 25,500-81, 100 வரையிலான சம்பளமும் (நிலை -4) , பன்னோக்குப் பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு 18,000 முதல் 56,900 வரையிலான சம்பளமும் (நிலை -2 ) இதர பதவிகளுக்கு 19,900 முதல் 63,200 வரையிலான  (நிலை - 2) சம்பளமும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.10.2022 அன்று 18-க்கு மேலும், 27-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

விண்ணப்பங்களை dssc.gov.in  என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் அனுப்பி வேண்டிய முகவரி The Admiral

Superintendent {for Manager Personnel}, Naval Dockyard, Visakhapatnam – 530014  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

23.09.2023 தேதிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment