தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வுக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவியின் பெயர்: இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள்: 21.09.2023
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 20.10.2023
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது.
தாள் -1 : 05.12.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.(பட்டப்படிப்பு தரம்) தாள் I-ல் மருந்தாக்கம், மருந்தியல் அறிவியல் மற்றும் வேதியியல் என ஏதேனும் ஒரு பாடப்பிரிவினை தேர்வு செய்து எழுதலால். 3 மணி நேரத்தில் 200 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
தாள் -2 : 05.12.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை
தாள் 2 இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி -அ: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)
பகுதி -ஆ: பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள்-I மற்றும் தாள்-II-பகுதி 'ஆ' வின் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்படாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry முடித்திருக்க வேண்டும். மருந்து சோதனை துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,400 – 1,15,700
வயதுத் தகுதி: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.
தேர்வு முறை: தேர்வு முறை ஒற்றை நிலையினைக் கொண்டது. கணினி வழியிலான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான கட்டணம் ரூ.100/ ஆகும். பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி: இணையவழி விண்ணப்பத்தை 20.10.2023 அன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.inஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment