இந்தியாவில் அதிக ஊதியம், உற்சாகமான தொழில் வாய்ப்புகளை வழங்கும் பல வேலைகள் உள்ளன. எப்போதும் இந்த அதிக வேலைகள் விரும்பப்படும் தேர்வுகளாக தனித்து நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதல் 10 அதிக சம்பளம் தரும் வேலைகள் எவை என விரிவாகப் பார்க்கலாம்.
டேட்டா விஞ்ஞானி: தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற சிக்கலான தரவுத் தொகுப்புகளை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள்: AI தொடர்ந்து பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், AI பொறியாளர்கள் அறிவார்ந்த இணைய டூல்களை வடிவமைத்து செயல்படுத்துகின்றனர். அனைத்து தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருந்து வருவதால், வேலை வாய்ப்புகள் அதிகளவில் இதற்கு உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 10-12 லட்சம் ரூபாய் வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது வெறும் சராசரி அளவு தான். இதே துறையில் சிலர் 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்.
பிளாக்செயின் டெவலப்பர்: பிளாக்செயின் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் எழுந்துள்ளதால், பல துறைகளில் இது வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 8-12 லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய திறமையான டெவலப்பர்களுக்கான தேவையை இந்த வேலை உருவாக்குகிறது.
மேலாண்மை ஆலோசகர்கள்: வணிகங்களின் செயல்திறன் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவத்தை மேலாண்மை ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.10 முதல் 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடச் சம்பளத்தைப் பெறுவார்கள்.
முதலீட்டு வங்கியாளர்கள்: சிக்கலான நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் பொறுப்பு, முதலீட்டு வங்கியாளர்கள் கையில் தான் உள்ளது. இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் என உள்ளது.
ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ்: ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ் சிக்கலான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு உயர் நிலை கட்டமைப்புகளை வடிவமைக்கின்றனர். மேலும் அவர்களின் நிபுணத்துவம் பொறுத்து ஆண்டுக்கு சராசரியாக 8 முதல் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள்: சுகாதாரத் துறையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க நல்ல சம்பளத்தைப் பெறுகிறார்கள். சில நிபுணர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள்: நிறுவனங்களுக்கு இணையப் பாதுகாப்பு முக்கியமானதாக இருப்பதால், தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக 7-10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
பெட்ரோலிய பொறியாளர்கள்: இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுடன், பெட்ரோலிய பொறியாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 8-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.
பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant): இவர்கள் நிதி தொடர்பான காரியங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். பட்டயக் கணக்காளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 6-10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.
இந்தத் தொழில்கள் அதிக வருவாய் ஈட்டும் திறனை வழங்கினாலும், அவர்களுக்கு பெரும்பாலும் சிறப்புக் கல்வி, பயிற்சி மற்றும் நிபுணத்துவம் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் திறமையான நிபுணர்களுக்கான தேவை பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இந்த முதல் 10 அதிக ஊதியம் பெறும் வேலைகள் நிறைவான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்கிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment