விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் விவரங்கள்:
பதவியின் பெயர் | எண்ணிக்கை | மாத ஊதியம் | தகுதி |
பல் மருத்துவர் (Dental Surgeon) | 1 | 34,000 | இளங்கலை பல் மருத்துவ படிப்பு (பிடிஎஸ் ) |
பல் மறுத்துவ உதவியாளர் (Dental Assistant) | 1 | 13,800 | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Programe Cum Administrative Assistant) | 1 | 12,000 | ஏதேனும் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக மேலாண்மை பணிகளில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் |
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.
இதர விவரங்கள்:
1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன
2. விண்ணப்ப படிவங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் வட்டார சுகாதார நிலைங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
2. இதற்கான, மின்னஞ்சல் முகவரி vnrnhm@gmail.com
4. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
5.திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்(Program, cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment