எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 2,409 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.
கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment