30,000 வரை சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - அரசு வேலைவாய் - Agri Info

Adding Green to your Life

September 14, 2023

30,000 வரை சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - அரசு வேலைவாய்

 திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை யைத்தில்  (One Stop Center - OSC) காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பதவிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 30.09.2023ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: 

பதவியின் பெயர்: மைய நிர்வாகி - (Centre Administrator)

காலிப்பணியிடம் - 1

கல்வி தகுதி:  சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 வருட ஆலோசனை வழங்கிய அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.30,000/-

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்:  வழக்கு பணியாளர் (Case Worker)

காலிப்பணியிடம் - 2

கல்வி தகுதி: சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் (Data Management, Process Documentation and Web-based reporting formats) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:  ரூ.18,000/-

வயது வரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்படி பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2ஆம் தனம் என்ற முகவரியினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment