திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும், பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் / முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
- திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம் 2 பணியிடங்கள்) - மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
- திரவக்கழிவு மேலாண்மை - 1 பணியிடம்) - மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
- திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் - 1 பணியிடம்; மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
- தகவல், கல்வி மற்றும் தொடர்பு - 2 பணியிடங்கள்; மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
கல்வித் தகுதி: முதல் இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று, திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று, தகவல், கல்வி மற்றும் தொடர்பு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், புகழ்பெற்ற/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொடர்பு / ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி என்ற முகவரிக்கு 11.09.2023 முதல் 22.03.2023-க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
பேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்யஇந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment