இந்த 4 ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு மிகவும் அவசியம்.. என்னென்ன தெரியுமா..? - Agri Info

Adding Green to your Life

September 23, 2023

இந்த 4 ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு மிகவும் அவசியம்.. என்னென்ன தெரியுமா..?

 முன்பெல்லாம் ஒரு லிஸ்ட் உடன் மளிகை கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு. தற்போது சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, அங்கு கண்ணுக்கு தென்படும் சாப்பிட தூண்டக்கூடிய அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கி குவித்து வீடு திரும்புகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் உடலுக்கு நல்லதா என்ற கேள்வியை கேட்க தவறிவிடுகிறோம். பெரும்பாலான நபர்கள் அதிக கலோரிகள் நிறைந்த குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நாள்போக்கில் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கே சீர்குலைவை ஏற்படுத்தி விடும்.

நாள் முழுவதும் எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை நாம் பெறுவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முழுமையாக கிடைப்பதில்லை. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ளலாம்.

கால்சியம் : நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,000 mg கால்சியம் தேவைப்படுகிறது. இது 3 கிளாஸ் பாலில் காணப்படும் கால்சியம் சத்து. ஆனால் பெரும்பாலான பெண்கள் தற்போது வெஜிடேரியன் அல்லது வெஜன் டயட்டை பின்பற்றுவதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்து விடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு கால்சியம் குறைபாடு எளிதாக ஏற்படுகிறது.

இரும்புச்சத்து : நமது செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஆக்சிஜன் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். பிரீமெனோபாஸ் கட்டத்தில் இருக்கக்கூடிய பெண்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது மாதவிடாய் சுழற்சியின் போது இரும்புச்சத்தை இழந்து வருகின்றனர். இந்த இழப்பை ஈடுக்கட்டுவதற்கு அவர்கள் போதுமான இரும்புச்சத்தை உட்கொள்வது அவசியம்.

நார்ச்சத்து : நார்ச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் இது உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு கை கொடுக்கிறது. ஒரு சில நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் ஒன்றிணைந்து செரிமான அமைப்பில் நுழையக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்கும்.

மெக்னீசியம் : மெக்னீசியம் தாது நம் உடம்பில் ஏற்படக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. மெக்னீசியம் நோய் எதிர்ப்பு அமைப்பு முதல் நரம்பு மண்டலம் வரை ஆதரவு அளிக்கிறது. பச்சை இலை காய்கறிகள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் முழு தானியங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.

வைட்டமின் D : பெரும்பாலான நபர்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் மட்டுமே போதுமானது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான எலும்புகளுக்கு வைட்டமின் D சத்தும் அவசியம். ஏனெனில் நம் உணவில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு இந்த ஊட்டச்சத்து உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தசைகள் சரியான முறையில் இயங்குவதற்கும், நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும் வைட்டமின் D உதவுகிறது. முட்டை மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் D காணப்படுகிறது. இது தவிர நமது சருமத்தை சூரிய வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தும் பொழுது நமது உடல் இயற்கையாகவே வைட்டமின் D சத்தை உற்பத்தி செய்கிறது.

பொட்டாசியம் : நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு பொட்டாசியம் உதவுகிறது. உணவில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும் கெமிக்கல் ரியாக்ஷன்களுக்கு பொட்டாசியம் ஆதரவளிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கும் நபர்களுக்கு பொட்டாசியம் குறைபாடு காணப்படும்.

உடல் நலனை கருதி உணவு உண்ணுதல் : ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும். நார்ச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் திகழ்கிறது. ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, ப்ராக்கோலி, முட்டைகோஸ், கேரட், முளைகட்டிய பயிர்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டாலே உங்கள் வெளிப்புற தோற்றமும், சருமமும் அழகாக மாறும். அதற்காக நீங்கள் தனியாக பணமோ, நேரமோ செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. சருமத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் பொழுது உங்களுக்கு டூ இன் ஒன் பெனிஃபிட் கிடைக்கும்.

சப்ளிமெண்டுகள் : உணவின் மூலமாக அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய என்னால் முடியாது என்று சொல்லக்கூடிய நபர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சப்ளிமெண்ட்டுகளை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு செய்வது ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பதற்கு உதவும். ஆனால் முடிந்தவரை உங்களது ஊட்டச்சத்துக்களை உணவின் மூலமாக பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.


No comments:

Post a Comment