Search

சிறுநீரகத்தை பாதிக்கும் 5 நோய்கள்... எச்சரிக்கும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க..!

 நமது உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நீரை சுத்திகரிப்பதோடு உடலை ஆரோக்கியமாக பேணவும் நமக்கு சிறுநீரகம் உதவுகிறது. மேலும் எலக்ட்ரோலைட் சமனிலையை சரியாக வைத்திருக்கவும் எரித்ரோபொரிடின், கால்சிட்ரோல் மற்றும் ரெனின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கவும் இது உதவுகிறது.

நம் உடலில் உள்ள pH, உப்பு, பொட்டாசியம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் ரத்த அணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் சிறுநீரகத்தில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் நமது உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மரபணு காரணங்கள் மற்றும் பல்வேறு நோய்களால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகிறது.

பொதுவாக ஏற்படும் 5 சிறுநீரக கோளாறுகள்: நாள்பட்ட தீராத சிறுநீரக நோய் : இது மிகவும் பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும் நோயாகும். உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் காரணமாக இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நோய்களுமே சிறுநீரகத்தில் உள்ள ரத்தகுழாயை பாதித்து, ரத்த சுத்திகரிப்பை தடுக்கிறது. இதனால் நாளடைவில் நமது சிறுநீரகத்தின் செயல்பாடு மோசமடைகிறது.

சிறுநீரக கற்கள் : இது பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறாகும். சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு நடைபெறும் போது, நம் ரத்தத்தில் உள்ள மினரல்கள் படிகமாகி கற்களாக உருவாகிறது. இது மிகவும் வலியை ஏற்படுத்துவதோடு சிறுநீர் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வரும். ஆனால் மற்ற சிறுநீரக நோய்களை ஒப்பிடும் போது இது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதில்லை. சில சமயங்களில் சிறுநீரில் இந்த கற்களும் வெளியே வரும். அந்த சமயத்தில் வலி அதிகமாக இருக்கும்.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் : நமது சிறுநீரகத்தில் பல நீர்க்கட்டிகள் உருவாகும் போது இந்நோய் ஏற்படுகிறது. வழக்கமான சிறுநீரக நீர்க்கட்டிகளை விட இது கொஞ்சம் வித்தியாசமானது. இதன் வடிவம் வேறாக இருப்பதோடு பெரிதாகவும் வளரக்கூடியது. இது நமது சிறுநீரக செயல்பாட்டை பாதித்து சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

குளோமெருலோனெப்ரிடிஸ் : சில தொற்றின் காரணமாக நமது சிறுநீரகத்தில் உள்ள சிறிய ரத்த குழாய்களான குளோமெருலியில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குளோமெருலோனெப்ரிடிஸ் நோய் நம் சிறுநீரகத்தை தாக்குகிறது. நமது சிறுநீரகம் நன்றாக செயல்படுவதற்கு இந்த சிறிய ரத்த குழாய்கள் மிகவும் அவசியமாகும். இவைதான் ரத்தத்தை சுத்திகரித்து கழிவை அகற்றுகிறது. இது உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தான நோய் இல்லை என்றாலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று : சிறுநீரகப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் இந்நோய் வருகிறது. இதை எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் முறையான சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் மோசமான பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் சிறுநீரகம் செயல்படாமல் போகக்கூட வாய்ப்புண்டு.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment