உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இயற்கையாகவே நிறைந்துள்ளது. அதை நாம் சரிவர புரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால், பலவகையான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். அந்தவகையில் சில செடிகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய காரணிகளாக திகழ்கின்றன.
இவற்றை வீட்டிற்கு உள்ளேயே வளர்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதில் அதிக மகத்துவம் கொண்ட ஐந்து செடிகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பலதர நோய்களுக்கு மருந்தாகத் திகழும் இந்த செடிகளை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மன சோர்வையும் நீக்கி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.
சோற்றுக் கற்றாழை: அலோவேரா, அதாவது சோற்றுக் கற்றாழை என்பது மருத்துவ பண்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும். அதன் இலைகளுக்குள் இருக்கும் பிசின் போன்ற பொருள் வெயில், சிறிய தீக்காயங்கள் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை செரிமானத்திற்கு உதவுகிறது.
இதன் சாற்றை உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடண்ட் பண்புகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
லாவெண்டர்: லாவெண்டர் அதன் அமைதியான, இனிமையான விளைவுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நறுமணம் கொண்ட மூலிகையாகும். லாவெண்டர் மலரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் பெரும்பாலும் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது தூக்கமின்மை பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கிறது. இதனைக் கொண்டு மூலிகை தேநீர் செய்து பருகலாம். இது உடலின் தளர்ச்சி நிலையை மாற்றி அமைக்கும் வல்லமைக் கொண்டது. லாவெண்டர் எண்ணெயில் கிருமிகளை அழிக்கும் பண்புகள் உள்ளன. மேலும் தோல் எரிச்சல் போறவைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.
மிளகுக்கீரை: பெப்பர்மிண்ட் எனும் மிளகுக்கீரை புதினா வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். பல சுகாதார நன்மைகளைக் கொண்ட பல்துறை மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். அஜீரணம், குடல் எரிச்சல், செரிமான பிரச்னைகள் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக இது பார்க்கப்படுகிறது. மிளகுக்கீரை தேநீர் தலைவலியைக் குறைக்கும் வல்லமைக் கொண்டது. அதன் நறுமணம், மெந்தால் உணர்வு காரணமாக சுவாச பிரச்னைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
பாம்புச்செடி (சான்செவியரியா): பாம்பு செடி என்பது ஒரு பிரபலமான வீட்டிற்குள் வளர்க்கப்படும் ஒரு செடி ஆகும். வீட்டிற்குள் இருக்கும் ஃபார்மால்டிஹைட், பென்சீன் போன்ற நச்சு மாசுக்களை காற்றிலிருந்து அகற்ற இது உதவுகிறது. குறைந்த பராமரிப்பு மற்றும் குறைந்த ஒளி நிலைமைகளில் இது செழித்து வளரக்கூடியது. இது உட்புற இடங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வீட்டிற்குள் பாம்பு செடிகளை வளர்ப்பதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை ஊக்குவிக்கலாம்.
எக்கினேசியா: எக்கினேசியா, கோன்ஃப்ளவர் என்றும் அழைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை வைத்தியம் ஆகும். சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது.
No comments:
Post a Comment