Search

மன அழுத்தம் முதல் சோர்வு வரை... ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற 5 தேநீர் வகைகள்..!

 டீ , காபி என்பது சிலருக்கு எப்போதாவது குடிக்கும் பானங்கள் . ஆனால் ஒருசிலருக்கு அது ஒரு உயிர்நாடி. அது இல்லாமல் நாளே ஓடாது. பசித்தாலும் டீ, பசிக்கவில்லை என்றாலும் டீ, சந்தோசமாக இருந்தாலும் டீ , சோகமானாலும் டீ என்று இருப்பார்கள். அப்படி  மக்களுக்கு ஒரு சுவாரசிய செய்தி. உங்கள் மூட் பொறுத்து நீங்கள் வெவ்வேறு வகையான டீயை அருந்தும் ட்ரிக் தான் சொல்கிறோம்.

நன்றாக தூங்க வேண்டுமா? கெமோமில் தேநீர் பருகவும். இரவில் தூங்குவதற்கான போராட்டம் உண்மையில் கொடூரமானது. சில சமயங்களில், நீண்ட நேரம் கடுமையான வேலை செய்த பிறகும் கூட, பலருக்கு நல்ல தூக்கம் கிடைப்பது கடினம். நீங்கள் அடிக்கடி இந்த சிக்கலை எதிர்கொண்டால், ஒரு கப் சூடான கெமோமில் தேநீர் பருகுங்கள். அது தயாரிக்கப்படும் டெய்சி மலர்கள் தூக்கத்தைத் தூண்டுவதோடு மனதை அமைதிப்படுத்தவும் உதவுகின்றன.

ஒரு சுறுசுறுப்பு வேண்டுமா? பிளாக் டீயைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் சமீப காலமாக ஆற்றல் குறைவாக உணர்கிறீர்கள். சோர்வாக இருக்கிறதா?  ஆம் எனில், கொஞ்சம் ப்ளாக் டீயை பருகலாம். மற்ற டீகளுடன் ஒப்பிடும் போது இதில் ஏராளமான காஃபின் உள்ளது. FDA இன் படி, ஒரு கப் பிளாக் டீயில் தோராயமாக 30-50 mg காஃபின் உள்ளது. இது விழிப்புணர்வை மேம்படுத்தி உடனடி ஆற்றல் ஊக்கியாக செயல்பட உதவும்.

மன அழுத்தமாக உணர்கிறீர்களா? பெப்பர்மின்ட் டீ உங்கள் நண்பராக மாறலாம். நீங்கள் மன அழுத்தத்தை உணரும்போது, ​​ஒரு கப் புதினா டீயை குடித்துப்பாருங்க. புதினா இலைகளில் உள்ள மெந்தோல் தசை தளர்த்தியாக செயல்படுகிறது மற்றும் தலைவலியையும் குறைக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸின் கூற்றுப்படி, புதினா மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதோடு நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

உடல்நலமின்மை  இருக்கிறதா? இஞ்சி டீயை பருகவும். வானிலை மாறும் நாட்களில், அல்லது தொண்டை புண் அல்லது சளி இருக்கும் நாட்களில், ஒரு கப் இஞ்சி டீ உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த உதவும். இஞ்சியின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதோடு உடல்நலக்குறைவுகள் விரைவில் குணமடையவும் உதவும்.

சோகமாக உணர்கிறீர்களா? லெமன்கிராஸ் டீயை முயற்சிக்கவும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பேசிக் அண்ட் கிளினிக்கல் பார்மகாலஜியின் படி , எலுமிச்சைப் புல்லில் உள்ள எண்ணெய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. நிச்சயமாக, மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளை நிர்வகிப்பது சாத்தியமில்லை, ஆனால் நீங்கள் பொதுவாக சோகத்தை அனுபவித்தால், அது நிச்சயமாக உதவியாக இருக்கும்.


0 Comments:

Post a Comment