இன்றைய நவீன யுகத்தில் எடை குறைப்பு என்பது மிகப்பெரும் சவாலாகி வருகிறது எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் ஆனால் அனைத்தும் கை கொடுக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
எந்தளவிற்கு உணவு பழக்கங்களை கட்டுப்படுத்தினாலும், குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிலரால் எடையை குறைக்கவே முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வராதது தான். காலையில் எழுந்ததும் இந்த ஐந்து விஷயங்களை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும் உங்களது எடையை மிக எளிதாக குறைக்கலாம்.
காலையில் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும் : காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. நம்முடைய கலாச்சாரங்களில் இந்த சுடு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்துள்ளது.
யோகாசனம் பழகுதல் : காலையில் யோகாசனம் செய்வது உடல் எடையை குறைப்பதற்கு உதவும். உதாரணத்திற்கு சூரிய நமஸ்காரத்தை சரியான நேரத்தில் செய்யும்போது கிட்டத்தட்ட 13.91 கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதை தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து செய்து வர 278-280 கலோரிகளை எரிக்க உதவுகிறது இது ஒரு மணி நேரம் கார்டியோ பயிற்சி செய்வதை விட சிறந்த முடிவுகளை தருகிறது என்று ஊட்டச்சத்து நிபுணரும், பாலக் நோட்ஸ் இன் நிறுவனருமான பாலக் மிதா தெரிவித்துள்ளார்.
புரதங்கள் நிறைந்த காலை உணவு : காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடும், சக்தியுடனும் இருக்க உதவும். புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டைகள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் உண்ணலாம்.
சரியான தூக்கம் : இரவில் சீக்கிரமாக உறங்க சென்று விட வேண்டும். அவ்வாறு செய்வதினால் வழக்கத்தை விட அதிக நேரம் தூங்க முடிவதுடன் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடல் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளவும் மிகவும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் குறைவான நேரம் தூங்கினால், தூங்காத நேரத்தில் உடலை புத்துணர்ச்சியோடு வைக்க நாம் அதிக உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இது உடலில் அதிக அளவுகள் கலோரிகள் சேர்ந்து எடை குறைப்பதற்கு தடையாக உள்ளது. எனவே குறைந்தபட்சம் எட்டு மணி நேர தூக்கமாவது அவசியம்.
சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவழியுங்கள் : ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஆவது சூரிய ஒளி நம் மீது படுமாறு செய்ய வேண்டும். அது எப்படி சூரிய ஒளியினால் எடை குறையும் என்ற கேள்வி வரலாம். சூரிய ஒளி நம்முடைய சருமத்தின் மீது நேரடியாக விழும்போது அது தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புகளை சிதைத்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. மேலே கூறிய விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வர உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம்.
No comments:
Post a Comment