முடி உதிர்வை தடுக்கும் 5 பழங்களை இங்கு பார்க்கலாம்
முடி உதிர்வு பிரச்சினையானது நமது முடியை நாம் முறையாக பராமரிக்காத காரணத்தாலும், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்காத காரணத்தினாலும், பல்வேறு சூழ்நிலைகளால் நமக்கு உருவாகும் மன அழுத்தத்தாலும் உருவாகிறது. இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பினும் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் முடி உதிர்வானது குறையும் என்பதை இங்கு பார்க்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரு பழமாக இருக்கிறது. இந்தப்பழத்தில் இருக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்கள் நமது முடிவளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதுமட்டுமல்ல நமது முடி சேதமடைவதையும் இவை தடுக்கின்றன.
பப்பாளிப்பழம்:
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அடங்கி இருக்கிறது. இந்த சத்துக்கள் நமது முடி உதிர்வை குறைப்பதோடு, முடியின் வேர்களையும் பலப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம்:
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மக்னீசியம், காப்பர், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இதில் அதிமாக இருக்கும் வைட்டமின் சி சத்து நம்முடைய ஹேர் ஃபோலிகல்ஸை, நமது உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்கஸ் பாதிக்காமல் பாதுகாக்குகிறது.
நெல்லக்கனி:
நெல்லிகனி சாப்பிடுவதால் நமது முடி நன்றாக வளர்வதோடு, முடி உதிர்வும் தடுக்கப்படும்
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் பொடுகுப்பிரச்சினையை தீர்ப்பதோடு, நமது முடி வளர்ச்சிக்கும் நன்றாக உதவுகிறது.
No comments:
Post a Comment