பாரத் ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க! - Agri Info

Adding Green to your Life

September 2, 2023

பாரத் ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 6, 160 தொழில்பழகுநர் (Apprentice) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:   6,160

பதவி: தொழில்பழகுநர் (Apprentice)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி காலம்: ஓராண்டு

ஊதியம்: பனிக்காலத்தின் போது  மாதம் ரூ. 15,000 நிதியுதவியாக அளிக்கப்படும். இதர ஊதிய நலன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி எழுத்துத் தேர்வு , உள்ளூர் மொழி அறிவு (Test of Local Language) ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, பொது/ நிதி மேலாண்மை விழிப்புணர்வு (General/Financial Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300/- ஆகும். பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? https://nsdcindia.org/apprenticeship (அல்லது)  https://apprenticeshipindia.org (அல்லது)  http://bfsissc.com (அல்லது)  https://bank.sbi/careers (அல்லது)  https://www.sbi.co.in/ careers ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மொழி அவசியம்:  இந்த பதவிக்கு உள்ளூர் மொழி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  மொத்தமுள்ள 6, 160 காலியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 648 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பேக் கிளிக் செய்யலாம்.

No comments:

Post a Comment