உடல் எடையை குறைக்கனுமா..? 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்..! - Agri Info

Adding Green to your Life

September 17, 2023

உடல் எடையை குறைக்கனுமா..? 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்..!

 அசைவ உணவுகளில் மட்டுமே அதிகமான ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை நிறைவாக உள்ளன என்ற கண்ணோட்டம் இருக்கிறது. இதை ஒருபக்கம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், சைவ உணவுகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. சைவ உணவுகளில் நம் உடலுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சைவ உணவுகளை நம் நாவின் தேடலுக்கு ஏற்ப சுவையாக சமைத்து சாப்பிட்டு வந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். சைவ உணவுகளை சமைப்பதும் கூட எளிமையான வேலை தான்.

உடல் எடையை குறைக்கலாம் : தேர்வு செய்யப்படும் காய்கறி உணவுகளை சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடையை குறைக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலிலும் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு இது உதவிகரமாக அமையும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறி என்ற அளவில் 7 நாட்களுக்கு வெவ்வேறு காய்கறிகளை உட்கொண்டு நம் உடல் எடையை நாம் குறைக்கலாம்.

நாள் 1 : முதல் நாளில் கழிவுகளை வெளியேற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் தொடங்கலாம். அதேபோல காலை உணவுக்கு தயிர், பெர்ரி பழம் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். திணை அரிசி சோறு, பீன்ஸ் சாலட் போன்றவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். பகல் பொழுதில் பசி எடுத்தது என்றால் கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் வயிறு நிறையும். இரவு உணவாக முழு தானிய கோதுமை ரொட்டி, சோயா தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

நாள் 2 : காலை உணவாக ஒரு கப் அளவு பொறி மற்றும் வேக வைத்த காய்கறிகள் கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மதிய உணவிற்கு கொண்டக்கடலை சாலட், பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். பசி எடுக்கும்போது அதை தீர்ப்பதற்கு நட்ஸ் மற்றும் ஆப்பிள் ஆகியவை கை கொடுக்கும். இரவு சிவப்பு அரிசியுடன், காய்கறி சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 3 : வழக்கம்போல காலையில் எலுமிச்சை சாறு நீர் அருந்தலாம். ஒரு மணி நேரம் கழித்து பழ ஸ்மூத்தி, கடலை பட்டர் ரொட்டி, மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகள், திணை சோறு ஆகியவற்றை சாப்பிடலாம். பசி எடுத்தால் தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கை கொடுக்கும். இரவில் நூடுல்ஸ், செர்ரி பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 4 : காலையில் பல தானியங்கள் கலந்த ரொட்டி, காய்கறிகள், தயிர் ஆகியவற்றையும், மதியம் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாலட் போன்றவற்றையும் சாப்பிடலாம். பசி நேரத்திற்கு வேர்கடலை பட்டர் எடுத்துக் கொள்ளலாம். இரவு ஊட்டி மிளகாய் கூட்டு மற்றும் திணை சோறு, காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 5 : காலையில் சியா விதை ஊற வைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பல தானிய இட்லி, தேங்காய் சட்னி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவாக ரசம் மற்றும் சிவப்பு அரிசி சோறு எடுத்துக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் பட்டியலில் நட்ஸ், விதைகள், உலர் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இரவில், முழு தானிய பிரெட், கிரில் செய்யப்பட்ட காளான் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 6 : காலை உணவாக அவகோடா பழம் மற்றும் அவித்த முட்டை ஆகியவற்றையும், மதிய உணவாக கொண்டக்கடலை மற்றும் சிவப்பு அரிசியுடன் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், பசி நேரத்திற்கு திராட்சை, பேரிக்காய் ஆகியவற்றையும் சாப்பிடலாம். இரவு சிவப்பு அரிசி சோறு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நாள் 7 : காலையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இலவங்க பட்டை நீர் அருந்தலாம். காலையில் ஆப்பிள் பழமும், புதினா சட்னி மற்றும் இட்லி ஆகியவற்றையும் சாப்பிடலாம். மதியத்திற்கு பாலக்கீரை, காளான் சாலட் மற்றும் இரவு உணவாக காய்கறிகள், காலிஃபிளவர் ரைஸ் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment