தினசரி உங்கள் நாள் பரபரப்பாக அல்லாமல் நிலையாக இருக்க வேண்டுமெனில் திட்டமிடுதல் அவசியம். அவ்வாறு திட்டமிட்டு உங்கள் அன்றாட வேலைகளை செய்கிறீர்கள் எனில் தேவையற்ற டென்ஷன்களை தவிர்க்கலாம். இதனால் மன நிம்மதி இருக்கும். அன்றைய நாளும் சீராக இருக்கும். அப்படி உங்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தினமும் 7 மணிக்கு மேல் இந்த விஷயங்களை செய்கிறீர்கள் எனில் மறுநாள் என்பது நிம்மதியான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதுமட்டுமன்றி உங்கள் வேலையில் முன்னேற்றமும் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அன்றைய நாளை ரீவைண்ட் செய்யுங்கள் : தூங்குவதற்கு முன் உங்களுடைய அன்றைய நாளை ஒரு முறை ஓட்டிப் பாருங்கள். நடந்த நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள், உங்களை சிரிக்க வைத்த விஷயங்கள் என அனைத்தையும் ஓட்டிப்பாருங்கள். இதனால் மறுநாள் நீங்கள் என்னென்ன விஷயங்களை தவிர்க்க வேண்டும். எப்படி அந்த தருணத்தை கையாண்டிருக்கலாம் என்பன போன்ற யோசனைகள் உதிர்க்கும். இதனால் மீண்டும் அதே தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதுதானே வெற்றி...
வேலை மற்றும் திரைகளிலிருந்து விலகியிருங்கள் : வீட்டிற்கு சென்றதும் சமூகவலைதளங்களை பார்ப்பது, ஓடிடி தளங்களில் படம் பார்ப்பது, மிச்சம் இருக்கும் அலுவலக வேலைகளை வீட்டிற்கு வந்து செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக புத்தகம் படிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதையெல்லாம் செய்தாலே உங்களுக்கு தூக்கம் தானாக வரும். உடலுக்கும் இது ஆரோக்கியம்.
நாளைக்கான திட்டமிடல் : தூங்கும் முன் நாளை செய்ய வேண்டிய வேலைகள் , மீட்டிங் இருப்பின் அதற்கு குறிப்புகளை தயார் செய்வது என உங்கள் மறுநாளையை திட்டமிடலோடு தொடங்க குறிப்பெழுதி வைத்துக்கொள்வது நல்லது.
மூச்சுப் பயிற்சி : தினமும் தூங்கும் முன் மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுத்து வாய் வழியாக வெளியே விடும் மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த மன அழுத்தமும் நீங்கி ஒருவித நிம்மதி கிடைக்கும். தூக்கமும் வரும். உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
சுய பராமரிப்பு : ஒவ்வொருவருக்கும் சுய ஆரோக்கியம் , சுய பராமரிப்பு அவசியம். சருமத்தை பராமரித்தலும் ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாகும். எனவே சருமத்தை ஹீல் செய்வதற்கான தினசரி வேலைகளை செய்வது அவசியம்.
No comments:
Post a Comment