கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 9.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவியின் பெயா் | ஜீப் ஓட்டுநா் |
சம்பளம் | ரூ.19500 – 62000 (Level-8)என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன். |
வயது வரம்பு | 01.07.2023 அன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்று உள்ளவாறு ) 42 வயதிற்குள் இருக்க வேண்டும். |
கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் | ”எட்டாம் வகுப்பு” தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பப் படிவம் | இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள் | 09.10.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடைதல் வேண்டும் |
நிபந்தனைகள்:
- தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
- இனசுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடா் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினா் ) இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் – ஆதரவற்ற விதவை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 09.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
- முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Click here for latest employment news
No comments:
Post a Comment