காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பதற்கான 8 காரணங்களை இந்தக் கட்டுரையில் கூறியுள்ளோம்.
தினமும் காலையில் மோசமான தலைவலியோடுதான் கண் விழிக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள். பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் தலைவலி என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தலைவலி எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தூக்கமின்மை : நீங்கள் இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை என்றால், காலையில் தலைவலியோடுதான் எழும்புவீர்கள். நீண்ட நாட்களாக சரியான தூக்கம் இல்லாதவர்கள் இன்சோம்னியாவால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரக்கூடும், அதுவும் காலை நேரங்களில் அதிகப்படியாக இருக்கும். இந்தப் பிரச்சனையிலிருந்து மீள சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிகப்படியான தூக்கம் : அட ஆமாங்க, அதிகமான நேரம் தூங்கினாலும் தலைவலி உண்டாகும். இப்படிச் செவது உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால் நீங்கள் அதிக நேரம் தூங்கும் போது உங்களின் இயற்கையான சர்காடியன் ரிதத்தில் சிக்கல் உண்டாகி, உங்களின் தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி உண்டாகிறது.
கவலை : மன அழுத்தம் மற்றும் கவலைகள் உங்களுக்கு ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். மேலும், மன அழுத்தம் உங்களின் தூகத்தையும் பாதிக்கும். ஒற்றைத் தலைவலி மற்றும் பிற தீவிர தலைவலிக்கும் உங்கள் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உங்களுக்கு மனநல பிரச்சனைகள் இருந்தால், அது சம்மந்தமான மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள். அப்போதுதான் காலையில் தலைவலியோடு எழுந்துகொள்ள மாட்டீர்கள்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் : தூக்கத்தில் மூச்சுத்திணறல் (ஸ்லீப் ஆப்னியா) ஏற்படுவது குறித்து மக்களிட்த்தில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறட்டை விடும்போது உங்களின் சுவாசம் தடைபடுகிறது. இதன் காரணமாக உங்களின் இரவு நேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தல், காலையில் எழுந்த்தும் தலைவலி ஏற்படுகிறது.
பற்களை கடிக்கும் பழக்கம் : அடிக்கடி பற்களை கடிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு காலையில் எழுந்ததும் தலைவலி ஏற்படும் பிரச்சனை இருக்கும். இப்படி பற்களை கடிப்பதால் தாடை மூட்டுகளில் வலி உண்டாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு தலைவலி வருகிறது.
பிற உடல்நல கோளாறுகள் : சில சமயங்களில் வெளியே தெரியாத வகையில் உங்கள் உடலுக்குள் நோய்க்கூறுகள் இருந்தாலும், உங்களின் தூக்கம் பாதிக்கப்படும். அடிக்கடி காலையில் தலைவலி வந்தால், அது மூளையில் ஏற்பட்டுள்ள கட்டிகளின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீர்ச்சத்து குறைபாடு : போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் கூட தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இரவு நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால், தூங்கும் போது உங்களின் நீர்ச்சத்து குறைந்துவிடும். இதன் காரணமாக காலையில் கண் விழித்த்தும், தலைவலி வருகிறது. ஆகையால் இரவு படுப்பதற்கு முன்பு போதுமான அளவு நிர் அருந்துங்கள்.
கழுத்து தசைப்பிடிப்பு : ஒழுங்கற்ற முறையில் அல்லது சரியான நிலையில் படுக்காத போது, உங்கள் கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இது உங்களுக்கு தலைவலியை தூண்டுகிறது.
அறிகுறிகளை உதாசினப்படுத்தாதீர்கள் : உங்கள் உடலில் வழக்கத்திற்கு மாறான வகையில் ஏற்படும் அறிகறிகளை உதாசினப்படுத்தாதீர்கள். ஆரம்பத்தில் லேசாக இருந்த மாதிரி தெரியும். ஆனால் போகப் போக உங்கள் உடலுக்குள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலையில் எழுந்ததும் அடிக்கடி தலைவலி வந்தால், இதன் கூடவே வேறு ஏதாவது அறிகுறிகள் வருகிறதா எனப் பாருங்கள். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment