நெல்லையில்செப்.3ல் யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நெல்லை மாவட்ட நூலகத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் செப்டம்பர் 3ல் தொடங்குகிறது.
திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யூபிஎஸ்சி முதல் நிலை பயிற்சிக்கான உதவித்தொகை பெறும் தேர்வு செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகமும் திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்துசெப்டம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட மையம் நூலகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வை எழுத விரும்புவர்கள் 9626252500, 9626253300 ஆகிய கைபேசி எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment