சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழுவிவரம் இதோ ! - Agri Info

Adding Green to your Life

September 14, 2023

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழுவிவரம் இதோ !

 தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னனணி நிறுவங்கள் கலந்து கொண்டு 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும், இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களும், பட்டதாரிகளும், ஐ.டி.ஐ தொழிற்கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் இலவசமாக பங்குபெறலாம். மேலும், இந்த முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 24615160 என்ற எண்ணிலோ அல்லது pjpsanthome@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment