உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் அல்லது அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவை கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கலாம்.
நீங்கள் ஹை கொலஸ்ட்ரால் லெவலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான எளிய இயற்கை வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. அது ஒரு வெஜிடபிள் ஜூஸ் தான். இந்த வெஜிடபிள் ஜூஸை தொடர்ந்து 3 - 4 மாதங்கள் குடித்து வருவதுடன், சமச்சீரான டயட்டை பின்பற்றி வந்தாலே போதும், கெட்ட கொலஸ்ட்ரால் லெவலை கணிசமாக குறைக்கலாம்.
அது என்ன ஜூஸ் என்று கேட்கிறீர்களா? bottle gourd என்று குறிப்பிடக்கூடிய சுரைக்காய் ஜூஸ் தான் அது. சுரைக்காய் ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதுடன் கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
டயட்ரி ஃபைபர்: டயட்ரி ஃபைபரின் சிறந்த மூலமாக சுரைக்காய் இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது. சுரைக்காயில் இருக்கும் டயட்டரி ஃபைபர் செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகளுடன் bind-ஆகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றை அகற்ற உதவுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த கெட்ட கொலஸ்ட்ரால் absorption குறைகிறது.
சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு: சுரைக்காயில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த ஒரு காயாக சுரைக்காய் இருக்கிறது. நீங்கள் உங்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க விரும்பினால் சுரைக்காயை டயட்டில் சேர்த்து கொள்வதோடு, இந்த காயின் ஜூஸை பருகலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்: சுரைக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட அழற்சி (Chronic inflammation) இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கிறது. சுரைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் இதை எதிர்த்து போராட உதவுகின்றன.
ஹைட்ரேஷன்: சுரைக்காய் பெரும்பாலும் தண்ணீரால் நிரம்பி இருக்கிறது. நீர்சத்து நிறைந்த காயாக இது இருக்கிறது. இதை ஆரோக்கியத்திற்கு நம் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம். ஏனென்றால் சரியான அளவில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது ரத்த அளவை பராமரிக்க உதவுகிறது, தவிர இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது. தவிர ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை சிறப்பாக வைக்கிறது.
பொட்டாசியம்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பொட்டாசியம் சுரைக்காயில் அதிகம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. பொதுவாக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தில் சோடியத்தின் விளைவுகளை எதிர்க்க உதவுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் நிறைந்த சுரைக்காய் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
உங்களுக்கு ஹை கொலஸ்ட்ரால் மற்றும் பிற இதய பிரச்சினைகள் இருக்கிறது என்றால், உங்கள் டயட்டில் சுரைக்காய் அல்லது சுரைக்காய் ஜூஸ் சேர்ப்பதகு முன் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment