மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் யோகா பயிற்சி செய்தால் சரியாகுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..! - Agri Info

Adding Green to your Life

September 10, 2023

மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் யோகா பயிற்சி செய்தால் சரியாகுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

 ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்று பொதுவாக கூறினாலும், எந்தெந்த பயிற்சியின் மூலம் எந்தெந்த பலன் கிடைக்கும் என்று தனிச்சிறப்பு மிக்க யோசனைகள் பல முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டால் நமது இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும் என்றும், உடல் எடையை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தசைகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் ஓட்ட பயிற்சி உதவிகரமாக இருக்கும்.

இருப்பினும் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டால் மூட்டு வலி ஏற்படுமா அல்லது மூட்டுகளுக்கு இந்த பயிற்சி நல்லதா என்ற கேள்வி பலருடைய மனதில் இருக்கிறது. ஓட்ட பயிற்சியில் ஈடுபடும்போது மூட்டுகளில் உள்ள ஜவ்வு சுருங்கி மற்றும் விரியும். இதனால் மூட்டுகளின் சுமூக செயல்பாடுகளுக்கு தேவையான திரவங்கள் சுரக்கும் மற்றும் ஆக்சிஜன் வினியோகம் சீராக நடைபெறும். மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்தக் கூடிய கழிவுகள் வெளியேற்றப்படும்.

மூட்டு வலி பிரச்சனையுடன் ஓடும் பொழுது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:

  • மூட்டு வலி, இறுக்கம் மற்றும் அழற்சி போன்றவை மூட்டு சார்ந்து ஏற்படுகின்ற பொதுவான பிரச்சினைகள் ஆகும். ஓட்ட பயிற்சி அல்லது ஜாகிங் பயிற்சி செய்வதால் மூட்டுகளில் தொடர்ந்து வலி நீடித்து வந்தால் நீச்சல் பயிற்சி அல்லது யோகா பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
  • மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் வகையில் உடனடியாக கடினமான பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
  • பயிற்சியை மேற்கொள்ளும் சமயத்தில் மிகச் சரியான காலணி அணிவது அவசியமாகும். இது உங்கள் கால்களில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
  • மூட்டுகளில் வலி இருந்தாலும் கால்களை அவ்வபோது அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அசைப்பதன் காரணமாக இயல்பான நகர்வு சாத்தியமாகும்.
  • உங்கள் கை, கால்கள், கழுத்து, தலை போன்ற அனைத்து பகுதிகளையும் நீட்டி ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • இறைச்சி, மீன், பால் பொருட்கள், பருப்புகள், நட்ஸ் போன்றவற்றில் புரதச்சத்து மிகுதியாக இருக்கிறது. இவை மூட்டுகளை வலுப்படுத்தும். இது தவிர எண்ணற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள அதைவிட மூட்டுகளுக்கு நீர்ச்சத்து அவசியமானது என்பதை மறந்து விடக்கூடாது.

    அதே சமயம் கொழுப்பு மற்றும் சர்க்கரை சார்ந்த உணவுகளை முடிந்த வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். மூட்டு வலிக்கு தீர்வு காண எளிய முறையில் வீட்டிலேயே தனித்துவமிக்க சிகிச்சை மற்றும் பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்டு வரலாம். அப்போதும் கூட வலி கட்டுப்படவில்லை என்றால் அருகாமையில் உள்ள எலும்பு நல்ல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.


No comments:

Post a Comment